இன்று என்ன? - ‘செல்’ எனும் சொல் தந்தவர்


இன்று என்ன? - ‘செல்’ எனும் சொல் தந்தவர்

அறிவியலாளர் ராபர்ட் ஹூக் இங்கிலாந்தில் ஃபிரஷ்வாட்டர் என்ற இடத்தில் 1635 ஜூலை 28-ம் தேதி பிறந்தார். சிறுவயது முதலே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளி செல்லவில்லை. வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது. ஓவியம் தீட்டுவதில் சிறந்து விளங்கினார்.

1648-ல் லண்டன் சென்று, ஒரு பள்ளியில் தானாக சேர்ந்து கொண்டார். அங்கு கிரேக்கம், லத்தீன், இயந்திரங்கள், அறிவியல், கணிதம் கற்றார். செடிகளில் உள்ள இலைகளை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்து சிறு சிறு அறைகள் இருப்பதைக் கண்டார். அவற்றுக்கு ‘செல்கள்’ எனப் பெயரிட்டார். ‘மைக்ரோஸ்கிராவியா’ என்ற நூலை எழுதினார். இதில் தாவரத் திசுக்களின் நுண்ணமைப்பு பற்றி எழுதியுள்ளார்.

செவ்வாய், வியாழன் கோள்களை ஆராய்ந்து, படங்களை வரைந்து விளக்கங்களையும் எழுதினார். இவை 200 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோள்கள் சுழலும் வேகத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டன. இயற்பியலாளர், வேதியியலாளர், உயிரியியலாளர், புவியியலாளர், கட்டிடக்கலை நிபுணர், வான் ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர் என பல்துறை வித்தகராக விளங்கியவர் ராபர்ட் ஹூக்.

FOLLOW US

WRITE A COMMENT

x