ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் 1931-ல் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மீனவர் குடும்பத்தில் பிறந்தார். பள்ளி பருவத்தில் காலையில் செய்தித்தாள் விநியோகம் செய்தார். திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய விஞ்ஞானி இவர். ஐக்கிய நாடுகள் சபை அப்துல் கலாமின் பிறந்தநாளை உலக மாணவர் தினமாக 2010-ல்அறிவித்தது.
1981-ல்பத்ம பூஷண் விருது, 1990-ல் பத்ம விபூஷன் விருது, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற ஜனாதிபதி என்ற பெருமை பெற்றவர். ’ஏவுகணை மனிதன்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் அப்துல் கலாம். அவருக்கு மிகவும் பிடித்தமான மாணவர்களுக்கு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கும்போதே 2015 ஜூலை 27-ம் தேதி இயற்கை எய்தினார்.
WRITE A COMMENT