இன்று என்ன? - பன்முகத் திறன் கொண்ட எழுத்தாளர்


இன்று என்ன? - பன்முகத் திறன் கொண்ட எழுத்தாளர்

உலகப் புகழ்பெற்ற அயர்லாந்து நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட் ஷா. அயர்லாந்தின் டப்ளின் நகரில் 1856 ஜூலை 26 -ம் தேதி பிறந்தார். வீட்டு வாடகைக்கு பணம் இல்லாமல், கடற்கரையில் ஓட்டைப் படகில் வசித்தார். 10 வயதில் பள்ளியில் சேர்ந்து 4 ஆண்டுகள் படித்தார். புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருந்ததால் வாரம் ஒரு பவுண்டு பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டார்.

இங்கிலாந்து சென்று எஸ்டேட் அலுவலகத்தில் எழுத்தராக வேலை செய்தார். அப்போது நிறைய எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவை திரும்பி வந்தாலும், தொடர்ந்து எழுதினார். இவரது அனைத்து படைப்புகளுமே சமூகத்தில் நிலவிவரும் சிக்கல்களைப் பிரதிபலித்தன.

அவரது எழுத்து போலவே நிஜ வாழ்வின் பேச்சிலும் நகைச்சுவை, நையாண்டி அதிகம் கலந்திருக்கும். 1925-ல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு, 'பிக்மலியன்' என்ற படத்தின் திரைக்கதைக்காக 1938-ல்ஆஸ்கர் விருது ஆகிய விருதுகளை பெற்றவர் பெர்னாட் ஷா.

FOLLOW US

WRITE A COMMENT

x