இன்று என்ன? - இஸ்ரோவின் முன்னாள் தலைவர்


இன்று என்ன? - இஸ்ரோவின் முன்னாள் தலைவர்

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் உடுப்பி ராமச்சந்திர ராவ். இவர் கர்நாடகவின் அடமாறு கிராமத்தில் 1932-ல்பிறந்தார். அடமாறுவிலும், உடுப்பியிலும் பள்ளி கல்வியை முடித்தார். அனந்தபூர் அரசு கல்லூரியில் இளங்கலை அறிவியலும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலையும் படித்தார்.

விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதலின்படி அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தனது முனைவர் ஆராய்ச்சியை முடித்தார். அகமதாபாத்தின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், பெங்களூருவில் உள்ள நேரு கோளரங்கம், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாகக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.

1972-ல் இந்தியாவில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் 1976-ல் இவருக்கு வழங்கப்பட்டது. 1991-ல் ஜிஎஸ்எல்வி என்ற புவிசார் ஏவுகணை வாகனம் மற்றும் கிரையோஜனிக் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை தொடங்கினார். 2017 ஜூலை 24-ம் தேதி மறைந்தார்.

FOLLOW US

WRITE A COMMENT

x