இன்று என்ன? - தற்காப்பு கலையின் தலைவர் லீ


இன்று என்ன? - தற்காப்பு கலையின் தலைவர் லீ

பிரபல நடிகர், தற்காப்புக் கலை ஜாம்பவான் புரூஸ் லீ. இவர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 1940-ல் பிறந்தார். 1961-ல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாடக கலைகள், தத்துவம், உளவியல் மற்றும் பல்வேறு பாடங்களைப் பயின்றார். அமெரிக்காவில் தற்காப்புக் கலைகளை கற்பிக்கத் தொடங்கினார். அதை ‘ஜுன் ஃபேன் குங்ஃபூ' அதாவது புரூஸ் லீயின் குங்ஃபூ என்று அழைத்தார்.

அவருடைய வாழ்க்கையில் முக்கிய பரிமாணமாக எப்போதும் ஜென் தத்துவம் அமைந்திருந்தது. ‘ஜீத் குனே தோ’ என்பது புரூஸ் லீயின் தற்காப்புக் கலை பாணி. அந்தப் பெயரில் எழுதப்பட்ட புத்தகத்தில் தற்காப்புக் கலை உத்திகளுடன், தனிமனித வளர்ச்சி, ஆன்மிக வளர்ச்சியையும் இணைக்க முயன்றார். தற்காப்புக் கலைகளில் வல்லவரான இவர் ‘என்டர் தி டிராகன்' உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் தற்காப்புக் கலையைப் போற்றும் விதத்தில் நடித்தார். 1973 ஜூலை 20-ல் தனது 32-வது வயதில் அகால மரணமடைந்தார். இவரது இறப்புக்கான காரணம் இன்றளவும் மர்மமாகவே இருந்து வருகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x