இன்று என்ன? - ஆதவனின் அற்புதமான படைப்புகள்


இன்று என்ன? - ஆதவனின் அற்புதமான படைப்புகள்

தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ஆதவன். திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் 1942-ல் பிறந்தார் . இவரின் இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம். இந்திய ரயில்வே துறையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். 1960-ல் எழுதத் தொடங்கினார். புதுடெல்லியில் உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ் பிரிவின் துணையாசிரியராகப் பணியாற்றினார். பிறகு பெங்களூருக்கு மாற்றலாகி வந்தார்.

இவரது குறுநாவல், சிறுகதை, நாடகம், புதினம் உள்ளிட்ட படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. “தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு” ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமானது.

1980-ல் வெளிவந்த “என் பெயர் ராமசேஷன்” என்ற புதினம் “வித்தாலி பூர்ணிகாவினால்” என்று ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 1 லட்சம் பிரதிகள் விற்பனையானது. கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி 1987 ஜூலை 19-ம் தேதி ஆதவன் மரணமடைந்தார். மரணத்திற்கு பின் இவரது ‘‘முதலில் இரவு வரும்” சிறுகதைக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

FOLLOW US

WRITE A COMMENT

x