Published : 17 Aug 2022 06:10 AM
Last Updated : 17 Aug 2022 06:10 AM
தொழிற்சாலைகளில் தொடங்கிய ரோபோ ஆதிக்கம் இன்று கல்வித் துறையிலும் கால் பதிக்கத் தொடங்கி இருக்கிறது. இப்போது எழும் பெரிய கேள்வியே பள்ளிகளில் ரோபோ, ஆசிரியர்களுக்கு மாற்றாக வருமா? அப்படி வந்தால் அது மாணவ சமுதாயத்திற்கு நன்மையா அல்லது தீமையா? முதலில் ரோபோ ஆசிரியர்களுக்கு மாற்றாக வருமா என்ற கேள்விக்குப் பதில் தேடுவோம்.
ரோபோவின் மூளை டிஜிட்டல் மூளை. அதற்கு சுயமாக யோசிக்கத் தெரியாது. ஆகவே ஆசிரியப் பணியில் ரோபோ, ஆசிரியர்களுக்கு மாற்றாக செயல்படாது. ஆகவே ஆசிரியர்கள் உதவி இல்லாமல் ரோபோவை மட்டும் வைத்துக் கொண்டு பள்ளியை நடத்த முடியாது. ஆனால், ஆசிரியர்களுக்கு ரோபோ உதவியாக இருக்கும். அடுத்து, ரோபோக்களின் திறமைகளைப் பற்றி பார்க்கலாம்.
முட்டாள் என்று அழைக்காது
ரோபோக்களின் ஞாபக சக்தி அதிகம். ரோபோக்கள் தன் முன் இருப்பவர்கள் கருப்பா, சிவப்பா என்று பார்ப்பதில்லை. குள்ளமா, உயரமா அல்லது ஒல்லியா, குண்டா போன்ற விவரங்களைப் பார்ப்பதில்லை.
ரோபோக்களுக்கு சாதி, மத பாகு பாடு தெரிவதில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது ஒரு ரோபோ ஆசிரியர் மாணவரை “முட்டாள்” என்று அழைக்காது. “நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு” என்று திட்டாது. ரோபோ ஆசிரியர் ஒவ்வொரு மாணவரின் தகுதியையும் புரிந்து கொண்டு அந்த தகுதிக்கு ஏற்ற மாதிரி சொல்லித்தரும்.
மாணவர் புரிந்து கொள்ளும் வரை எத்தனை முறை வேண்டு மானாலும் சொல்லித்தரும். ரோபோ ஆசிரியருக்கு செயற்கை அறிவு (Artificial Intelligence) உள்ளது. மாணவர் ஒரு தேர்வில் சில கேள்வி களுக்கு பதில் சரியாக எழுதவில்லை என்றால், எந்த சப்ஜெக்ட் மாணவர் களுக்குப் புரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டு அந்த சப்ஜெக்டை மாணவருக்கு மீண்டும் சொல்லித் தரும்.
அனிமேஷன் முறையில் பாடம்!
அனிமேஷன் முறையில் ரோபோ ஆசிரியர் பாடங்களை சொல்லித் தருவதால் மாணவர்களுக்கு எளிதில் புரியும். ரோபோ ஆசிரியர் முதலில் வகுப்பில் உள்ள மாணவர்கள் அனை வரின் தகுதிகளையும் பரிசீலித்து அதற்கு ஏற்ப சொல்லித்தரும். இது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி செயல்படும். தமிழக அரசு சிறந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் துணையோடு ரோபோ ஆசிரியரை உரு வாக்க முடியும்.
ரோபோ ஆசிரியர்களால் தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் பாடம்நடத்த இயலும். “ஸ்மார்ட் போர்டில்” எளிதில் சொல்லித்தர இயலும்.இணைய வசதி மூலம் இணைக்கப் பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டில் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் ரோபோ ஆசிரியருக்கு உடனே தெரிந்து விடும்.
மீண்டும் ஒரு சமூக மறுமலர்ச்சி ஏற்பட இந்த ரோபோ ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிகளில் நிறுவப்பட வேண்டும். இதை எந்த மாநிலம்முதலில் முழு அளவில் செயல்படுத்து கிறதோ அதன் வளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும். தமிழகம் இதிலும் முன்னோடியாகத் திகழ வேண்டும்.
அதேநேரம் ரோபோ ஆசிரியரின் பாதகங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் ரோபோ ஆசிரியருக்குத் தேவையான மென்பொருள்கள் வளர்ச்சி அடைய வில்லை. அதன் காரணமாக மாணவர்கள் ஆரம்பத்தில் ரோபோ ஆசிரியரிடம் இருந்து அதிகம் கற்க இயலாது.
90 சதவீதம் தற்போதைய வகுப்பு ஆசிரியரும், 10 சதவீதத்தை ரோபோ ஆசிரியரும் வகுப்பின் செயல்பாடுகளைப் பிரித்துக் கொள்ளலாம். நாளுக்கு நாள் ரோபோ ஆசிரியரின் பங்கு அதிகரிக்கும். ஆரம்பத்தில் இதன் விலை அதிகமாகத் தெரியலாம். ஆகவே, அரசு தனியார் துணையுடன் இணைந்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்
தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT