Published : 10 Oct 2022 06:06 AM
Last Updated : 10 Oct 2022 06:06 AM
கேள்விகளுக்கான பதில்களை பார்க்கலாம் என்றதும் கதைகளைக் கேட்ட ஆர்வத்துடன் பரபரப்பும் அனைவரிடமும் சேர்ந்து கொண்டது. மரங்களின் எண்ணிக்கை மூன்று. சரியாக இருந்தாடி அடிச்சுக்கோங்க என்று கூறினேன். நான் சரி, நான் சரி என்ற மகிழ்ச்சிக் குரல்கள் ஆங்காங்கே எழுந்தன. புறாக்களின் மொத்த எண்ணிக்கை முப்பது என்று கூறியதும் ஆங்காங்கே முணுமுணுப்பு. ஒவ்வொரு மரத்திலும் பத்து புறாக்கள், எனவே முப்பது என்று கூறியதும் முணுமுணுப்பு குறைந்தது.
சுடப்பட்டு விழுந்த புறாக்கள் இரண்டு. மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. மீதம் மரத்தில் இருக்கும் புறாக்கள் எத்தனை என்று கேட்டதும் இருபத்தெட்டு என்றுஏராளமான குரல்கள் எழுந்தன. ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்று ஒருவன் கத்தினான். எப்படி என்று கேட்டேன். "துப்பாக்கி சத்தத்துல புறாவெல்லாம் பறந்துடும்ல!" என்று அவன் பெருமிதமாகக் கூறிய தும் பல குரல்கள் அதை ஆமோதித்தன. மூன்று கதைகளுக்கும் கேட்கப்பட்ட கேள்விகளின் பதில்களைச் சொல்லி முடித்தேன். கவனத்தோடு கேட்கும் திறன் குறைந்திருக்கிறது. இதே கதைகளை நடுநிலை வகுப்பு மாணவர்களைக் கேட்க வைத்து பதில்களைப் பார்க்க வேண்டும். அவர்களின் கவனித்தல் திறன் குறித்து அறிய வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT