Published : 18 Feb 2020 10:33 AM
Last Updated : 18 Feb 2020 10:33 AM
வெங்கி
போட்டோஷாப் மென்பொருளில் எடிட்டில் அடுத்ததாக Color Settings பற்றி பார்ப்போம். இது ஏற்கெனவே டீஃபால்ட் ஆக உள்ள வண்ண அமைப்புகளைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ள உதவுவதாகும். முதலாவதாக எடிட்டில் சென்று Color Settings-ஐ க்ளிக் செய்யுங்கள்.
கலர் செட்டிங்குக்கான ஒரு பட்டி தோன்றும். அதில் டீஃபால்ட் ஆக என்ன மாதிரி வண்ண அமைப்புகளைக் கொண்டிருந்தாலும், நமது வேலைகளுக்கு ஏற்ற அமைப்புகளையே நாமும் தேர்ந்தெடுத்து Save செய்து, ஓ.கே. கொடுக்க வேண்டும். ப்ரிண்ட் போடக்கூடிய வேலைகளுக்கு CMYK கலரில் வைத்து வேலை செய்ய வேண்டும். பிற வேலைகளை RGB மோடில் செய்யலாம்.
Assign Profile - படத்தின் ஒட்டுமொத்த வண்ண அமைப்பையும் திருத்திக்கொள்ளும் அம்சமாகும். Convert to Profile - இதுவும் வண்ணங்களை மாற்ற உதவும்.
Keyboard (விசைப்பலகை) Shortcuts - இது மிகவும் பயனுள்ள ஓர் அம்சமாகும். நம்மில் பலர் இந்த ’ஷார்ட்கட்’டை பயன்படுத்தாமல் மவுஸைக் கொண்டே ஒவ்வொரு Option-ஐயும் தேர்ந்தெடுத்து வேலை செய்கின்றனர். சிலர் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த ஷார்ட்கட்டை உபயோகிக்கின்றனர்.
நாம் நமக்குத் தேவையான ஷார்ட்கட்டை Application Menus, Panel Menus மற்றும் Tools ஆகிய மூன்று விதமான அம்சங்களுக்கும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதே இதன் சிறப்பு ஆகும். அதற்கு முதலில் எடிட்டில் சென்று Keyboard Shortcuts ஐ தேர்வு செய்துகொள்ள வேண்டும். பிறகு தோன்றும் பட்டியில் Shortcuts for என்கிற இடத்தில் Application Menus-ஐ தேர்வு செய்துகொள்ளவும்.
இப்போது அதன் கீழே தோன்றும் பட்டியில் உள்ளவற்றை க்ளிக் செய்து தேவையான ஷார்ட்கட் மாற்றங்களை நாம் செய்துகொள்ளலாம். அதே போலவே பிற அம்சங்களிலும் மாற்றத்தை செய்துகொள்ளலாம்.
மேற்கண்டவற்றில் இல்லாத சில ஷார்ட்கட்களையும் உருவாக்க முடியும். அதைப் பற்றி பிறகு வரும் பாடங்களில் பார்ப்போம்.இப்போது Application Menus–ல் File-ல் உள்ள முக்கியமான சில ’கீபோர்டு ஷார்ட்கட்’களை இங்கே பார்ப்போம்.
இதில் windows கீபோர்டுக்கான ஷார்ட்கட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. Mac சிஸ்டம் என்றால், Controlக்குப் பதில் Command-ஐ பயன்படுத்த வேண்டும்.
ஷார்ட்கட் கீஸ் ஒரு புதிய ஆவணம் திறக்க : Ctrl+N |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT