வெங்கி
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முக்கிய பிரிவான கிராபிக்ஸை உருவாக்கவும் தொகுக்கவும் பயன்படும் போட்டோஷாப் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். போட்டோஷாப் பட்டியலில் காணப்படும் சில அம்சங்களைத் தெரிந்துகொள்வோம்.
Revert ( F12 )
இது உங்களது படத்தில் எந்த மாற்றமும் செய்யாது. அதாவது நீங்கள் ஒரு படத்தைத் திறந்து எவ்வளவுதான் வேலை செய்திருந்தாலும் அதில் அந்த வேலைப்பாடுகள் நடைபெறாமல் அதை ஓப்பன் செய்தபோது எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைக்குக் கொண்டு சென்றுவிடும், அல்லது அப்படத்தில் முன்பு வேலை செய்து சேமித்து வைக்கப்பட்ட அதே நிலையிலேயே இருக்கும்.
Export
இதில் Preferences, Export as ( Alt +Sift+Ctnl+W ) மற்றும் Save for web (Alt+Sift+Ctnl+S ) எனப் பல அம்சங்கள் உள்ளன.
இவை நமது பக்கங்களை நமக்குத் தேவையான வகையில், வடிவத்தில், ப்ரிண்ட் செய்யவோ, அல்லது ஆன்லைனுக்குத் தேவையான ‘வெப்’ தன்மையிலோ ஏற்றிவைத்துக்கொள்ள உதவும். ஒரு வெப் பக்கத்துக்குத் தேவையான பட்டன்கள், ஜிஃப் அனிமேஷன் எனப்படும் அசையும் படங்களையும் உருவாக்கிக் கொள்ள Save for web உதவுகிறது.
Automate
போட்டோஷாப்பில் ஒரு படத்தில் ஏகப்பட்டபடிகள் (steps) கடந்து நமக்குத் தேவையானமாறுதல்களைச் செய்வோம். அப்படி ஒரு படத்துக்கு செய்யும் அதே வேலைகளை அந்தப்படிகள் மாறாமல் அதையே பல படங்களுக்கும் செய்வதை Action என்கிற அமைப்பு
எளிதாக்குகிறது. இந்த ஆக்ஷனை எப்படிக்கையாள்வது என்பதை பின்வரும் நாட்களில் பார்க்கலாம்.
ஆட்டோமேட்டின் பணி என்னவென்றால், நம்மிடம் நிறைய படங்கள் இருந்தாலும் அனைத்தையும் ஆக்ஷன் என்கிற அமைப்
பின் உதவியோடு தேவையான ஃபோல்டர்களில் உள்ள படங்கள் அனைத்தையும் ஒரே ‘க்ளிக்’கில் விரும்பிய மாறுதல்களைச் செய்து, நமக்குத் தேவையான ஓர் இடத்தில் சென்று சேமித்து வைப்பதே ஆகும்.
WRITE A COMMENT