கடந்த 1896-ல் நடைபெற்ற முதல் நவீனஒலிம்பிக்ஸில் அதிகத் தங்கப் பதக்கங்களை வென்றவர்கள் யார்?
பெரும்பாலான பதக்கங்களை வென்றவர்கள் அமெரிக்க மற்றும் கிரீஸ் நாட்டுவிளையாட்டு வீரர்கள்தான். ஆனால், யாருக்குமே தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை. போட்டியில் முதலாவதாக வந்தவருக்கு வெள்ளிப் பதக்கம்தான். அடுத்துவந்தவருக்கு வெண்கல மெடல். மூனறாவதுபரிசு கிடையாது. கொசுறாக முதலிடம் பெற்றவர்களுக்கு ஆலிவ் கிளைகளால் செய்யப்பட்ட மகுடம் சூட்டப்பட்டது. தவிர,பெயர்தான் நவீன ஒலிம்பிக்ஸ். பெண்களுக்கு போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. 37 வயதான கிரேக்க விளையாட்டு வீரரான ஜியோனியோஸ் வயதில்மூத்த பதக்கத்காரர் என்றால் ஹங்கேரியைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஆல்ப்ரெட் ஹஜோசுக்கு வெறும் 18 வயதுதான்.
நவீன ஒலிம்பிக்ஸ் ஆரம்பக்காலத்தில் எத்தகைய சோதனைகளை எதிர்கொள்ள நேரிட்டது?
இதற்கு உதாரணமாக 1900-ல் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸை சொல்லலாம். 1000-த்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்ற போதும், பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கூட தாண்டவில்லை. தடகளத்திற்கென சிறப்பு மைதானம் ஏற்பாடு செய்யப்படவில்லை. புல்வெளியில்தான் ஓட்டம். காட்டுப் பகுதியில் போட்டிகள் நடைபெற்றதால் மரங்கள் மற்றும் புதர்களுக்கு நடுவே ஹாமர் மற்றும் டிஸ்கஸ் போட்டியில் வீசப்பட்டவை அவை சிக்கிக்கொண்டன.
வில்வித்தைப் போட்டி அதிகாரபூர்வமாக ஆக்கப்பட்டது. பண்டைய ஒலிம்பிக்ஸ் நிறுவிய ஹெர்குலிஸ் வில்வித்தையில் சூரர் என்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தச் செயல். யார் அதிகபட்ச புறாக்களை சுடுகிறார்கள் என்ற போட்டியும் இடம்பெற்றது. பெல்ஜிய நாட்டு வீரர் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் 21 புறாக்களை சுட்டு சாதனை படைத்தார். எனினும் இந்தப் போட்டிக்கு பலமான எதிர்ப்பு வரவே அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இருந்து இந்த விளையாட்டு நீக்கப்பட்டது.
WRITE A COMMENT