திசைகாட்டி இளையோர் 8-  சிறுவர்களின் மீட்பு நாயகி அனோயாரா


திசைகாட்டி இளையோர் 8-  சிறுவர்களின் மீட்பு நாயகி அனோயாரா

மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் காடுகள் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்தான் அனோயாரா கௌட்டன். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்தார். ஏழ்மையான குடும்பச் சூழல். தந்தையின் இழப்பினால் அவள் குடும்பம் மேலும் வறுமையில் வாடியது. அவர் தாய் அருகில் இருந்த பள்ளியில் சமையல் வேலை செய்து வந்தார். வறுமையினால் தனது பன்னிரண்டாவது வயதிலேயே பள்ளிக்குச் செல்வதைக் கைவிட்டு குடும்பச் செலவுகளைச் சமாளிக்க அனோயாரா வேலை தேடத் தொடங்கினாள்.

இந்த காலகட்டத்தில்தான் அவள் அவர்களைச் சந்தித்தார். யார் அவர்கள்? வறுமையில் வாடும் ஏழைச் சிறுவர்களை வெளியூரில் நல்ல வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, பணியாட்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு கொத்தடிமைகளாக விற்று
விடுபவர்கள். அப்படி வேலைக்குப் போகும் சிறுவர்கள் திரும்ப ஊருக்கு வர முடியாது. இப்படித்தான் அனோயாராவும் டெல்லியில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்திற்கு விற்கப்பட்டாள். அந்த வீட்டை அவள் "நரகக் குழி"என்று பின்னர் குறிப்பிடுகின்றார்.

உதவ நீண்ட கரம்ஆறு மாதங்கள் அங்கு மிகவும் துன்பப்பட்டு வேலை செய்தாள். ஒரு நாள் அந்தவீட்டை விட்டு தப்பித்துஓடினாள். டெல்லியில் ஆதரவற்றுத் திரிந்த அவளைக் ‘குழந்தைகளைக் காப்போம்’ எனும்தன்னார்வ தொண்டு நிறுவனம் பாதுகாப்பாக அவளை ஊருக்கு அனுப்பிவைத்தது.

வீட்டுக்குத் திரும்பிய பிறகு, தன்னைப் போன்று லட்சக்கணக்கான சிறுவர்கள் நாட்டில் இம்மாதிரி ஏமாற்றப்பட்டு சுரண்டப்படு
கிறார்கள் என்பதை உணர்ந்தாள். தாம் தப்பித்து வந்தது போல அவர்கள் எல்லோருக்கும் வாய்ப்புகள் அமைவதில்லை என்பதையும் புரிந்து கொண்டாள்.

தான் அனுபவித்த கொடுமையை இனி யாரும் அனுபவிக்ககூடாது என்று அனோயாராகருதினாள். எனவே சிறுவயதிலேயே அடிமைகளாக பணிபுரியும் சிறுவர்களை விடுதலை செய்து, அவர்களுக்கு நல்லவாழ்க்கையை உருவாக்க உறுதி பூண்டாள்.

பிச்சை எடுப்பதற்காக, தொழிற்சாலைகளில் ஆபத்தான பணிகள் செய்வதற்காக, பாலியல் தொழில் செய்வதற்காக என பல மோச
மான வேலைகளுக்காக உலகளவில் 15 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்.

சிறுவர் அமைப்பு உருவாக்கம்

தன் ஊரைச் சேர்ந்த சிறுவர்களிடம் உரையாடி அவர்களை ஒருங்கிணைத்தாள். ஒரு சிறுமியை கடத்தல்காரர்கள் கொண்டு செல்ல முயன்றபோது சிறுவர் படையோடு சென்று எதிர்த்து அந்தச்சிறுமியைக் காப்பாற்றினாள். இந்த வெற்றி அவளுக்கு நம்பிக்கை கொடுத்தது. எனவேதன்னுடைய சிறுவர்கள் படையுடன் தொடர்ந்து செயல்பட்டாள்.

மேற்கு வங்க கல்வி அமைச்சர் ஒருமுறை இவர்களுடைய கிராமத்துக்கு வந்தார். அப்போது தன்னுடைய சிறுவர் அமைப்போடு சென்று தங்கள் பகுதியில் தரமான பள்ளிக்கூடங்களை கட்டித்தரும்படி கோரிக்கையை வைத்தார். அதன் பிறகு சுந்தர்பன் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் 80 பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.

இன்று அனோயாரா,அந்த மாநிலத்தில் குழந்தைகள் உரிமைகளுக்காகப் போராட 80-க்கும் மேற்பட்ட அமைப்பை நிறுவி இருக்
கிறார். இதுவரை 85 சிறுவர்களை கடத்தலிலிருந்து மீட்டிருக்கிறார். விற்கப்பட்ட 200 குழந்தைகளை மீட்டெடுத்து குடும்பங்களுடன் இணைத்துள்ளார். பள்ளியில் இருந்து இடைநின்றுபோன 200 குழந்தைகளை மறுபடியும் பள்ளியில் சேர்த்துள்ளார். இப்படிச் செயல்பட்டு வரும் இவர்ஐநா சபையால் பாராட்டப்பட்டு, தன்னுடையஅனுபவங்களைக் குறித்துப் பேச அழைக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் 2017-ல் 'நாரி சக்தி புரஸ்கார்' விருதை அளித்து கௌரவித்தார். குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உலகை உருவாக்கும் பணியை அனோயாராதொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

கட்டுரையாளர்: பேராசிரியர், சமூகச் செயற்பாட்டாளர்.

FOLLOW US

WRITE A COMMENT

x