“உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு எது?” என்று கேட்டால் பல குழந்தைகள், “படங்கள் வரைந்து ஓவியம் தீட்டுவது” என்றே உடனடியாகச் சொல்வார்கள். பிடித்தமான உருவங்களை உற்றுக் கவனித்து அச்சு அசலாக வரையும் திறமை பலருக்கு இருக்கும். ஆனால், ரசித்து வரைந்த படத்துக்கு உயிரூட்டுவது தூரிகை மூலம் பாயும் வண்ணங்கள்தாம். இது தனித்தன்மை வாய்ந்த கலை. இதை உங்களுக்கு அழகுறக் கற்றுத்தர நாங்கள் இருக்கிறோம்.
தேவையான பொருட்கள்
250 gsm வெள்ளை சார்ட் போர்டு.
2b பென்சில் - வரைய.
அக்ரிலிக் வண்ணங்கள் அல்லது போஸ்டர் வண்ணங்கள்.
1, 3, 5 மற்றும் 6 அடர்த்திகொண்ட தூரிகைகள்.
-ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், அப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகம், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரிக் ஆர்ட் அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியவர்.
WRITE A COMMENT