போட்டோஷாப் - பட்டியல் (Menu)


போட்டோஷாப் - பட்டியல் (Menu)

வெங்கி

Open As

பொதுவாக Open - ல் திறந்து பார்க்கவியலாத வேறு வகைமைப் படங்களையும் Open As – ல் திறந்து எடிட் செய்ய முடியும்.
Open as Smart Objectஇதில் vector அடிப்படையிலான கோப்புகளை எடுத்து வந்து பயன்
படுத்தலாம்.

Open Recent

சில கோப்புகளை திரும்ப எடுத்துவந்து எடிட் செய்வோம். அல்லதுஅதைக் கொண்டு புதிய கோப்புகளை உருவாக்குவோம். அப்படி
தேவைப்படும் கோப்புகளை மெனுபட்டியலில் File > Open என்று போய்எடுப்பதற்குப் பதிலாக, OpenRecent ஆப்ஷனுக்குப் போனால், அங்கு திறந்து பார்க்கப்பட்ட, சமீபத்தியபடங்கள் 20 வரை காட்டப்படும்.

Close (Ctrl + W)

தேவையான திருத்தங்களைச் செய்த பின், அந்தப் பக்கத்தை மூடிவிட இது உதவுகிறது. மூடும் முன் கண்டிப்பாக சேமிக்க வேண்டும்.
Close All (Alt + Ctrl + W)ஒருவேளை பல கோப்புகளைத் திறந்து வைத்திருந்தால், ஒரே நேரத்தில் அனைத்து கோப்புகளையும் மூடிவிட உதவும் ஒரு ஆப்ஷன் இது.

Save ( Ctrl + S)

ஒரு பக்கத்தை மூடும் முன்பாக அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் சேமிக்கப்பட வேண்டும் அல்லவா? அதற்கு File -க்கு சென்று Save கொடுக்க வேண்டும். அல்லது Ctrl + S பட்டனை அழுத்த வேண்டும்.

Save As...

இது ஒரு பக்கத்தை எடுத்துக் கையாளும்போது, அப்பக்கத்தின் அசலான தன்மை மாறிவிடாமல் வேறொருநகல் பக்கத்தை உருவாக்கிக் கொடுப்பதாகும்.அப்போது அந்த நகல் பக்கத்துக்கு நாம் அவசியம் ஒரு புதிய பெயரைக் கொடுக்க வேண்டும். இப்போது அசல் அதன் தன்மையும் பெயரும் மாறாமல் இருக்கும்.

இதன் மூலம் நாம் எடுத்துக் கையாளும் ஒரு படத்தின் அசல் சேதமடையாமல் பத்திரமாக இருப்பதற்கு உத்தரவாதம் கிடைக்கிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x