உலக சுனாமி விழிப்புணர்வு நாள்- நவம்பர் 5
இதுவரை உலகில் 58 முறை சுனாமி ஏற்பட்டிருக்கிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,60,000. குறிப்பாக 2004 டிசம்பரில் இந்தியப் பெருங்கடலில் நிகழ்ந்த சுனாமி இந்தியா உட்பட பல நாடுகளில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்களை பலி கொண்டது மட்டுமல்லாமல் கடலுக்கு அருகே வாழும் மக்களின் வாழ்வில் பலத்த சேதத்தை விளைவித்துச் சென்றது. சுனாமி வருவதற்கான சாத்தியங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதுமுன்கூட்டி எச்சரிக்கை விடுப்பது தடுப்புமற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்
கொள்வது ஆகியவற்றுக்கான முக்கியத்துவம் இதற்குப் பிறகுதான் உணரப்பட்டது.
2015 டிசம்பரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5-ம் நாளை சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாளாக அனுசரிக்க ஐநா பொது அவை தீர்மானித்தது. ஜப்பான்தான் சுனாமியால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடு. சுனாமி தொடர்
பாக ஜப்பானில் நடைபெற்றதாக சொல்லப்படும் ‘இனாமுரா ஹோ-ஹி’ என்ற கதையைகவுரவிக்கும் விதமாக நவம்பர் 5 சுனாமி
விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கூடைப்பந்தை கண்டுபிடித்தவர் பிறந்த நாள்- நவம்பர் 6
1861 நவம்பர் 6 அன்று கனடாவின் ஒண்டாரியோவில் பிறந்தவர் ஜேம்ஸ் நய்ஸ்மித். உடற்கல்வியில் பட்டம் பெற்று அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் மாகாணத்தில் இருந்த ஸ்ப்ரிங்ஃபீல்ட்கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணி
யாற்றிய நய்ஸ்மித் அங்கிருந்த மாணவர்களுக்காக கண்டுபிடித்த புதிய விளையாட்டுதான் இன்று சர்வதேச அளவில் முக்கிய
இடம் வகிக்கும் கூடைப்பந்து விளையாட்டு ஆகும். 1891-ல் கூடைப்பந்து விளையாட்டை கண்டுபிடித்த நய்ஸ்மித் 1982 ஜனவரி 15 அன்று 13 விதிகளை விவரிக்கும் நூலையும்வெளியிட்டார். 1936-ல் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கூடைப்பந்து சேர்க்கப்பட்டது.
குழந்தைப் பாதுகாப்பு நாள்- நவம்பர் 7
குழந்தைகள் மனித சமுதாயத்தின் வருங்காலத் தூண்கள். அவர்களை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்7-ம் நாள் குழந்தைப் பாதுகாப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் குழந்தைகளை பாதுகாப்பது, நல்லபடியாக வளர்ப்பது மற்றும் அவர்களின் வாழ்நிலையை மேம்படுத்துவது ஆகியவை குறித்த
விழிப்புணர்வை அதிகரிப்பதே ஆகும்.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார்30 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் நான்கு நிலைகளில்
உள்ளது. முதல் நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் நோயை குணப்படுத்தி நோயாளியைகாப்பாற்ற முடியும். முற்றிய நிலையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சிகிச்சை
செலவும் மிக அதிகம். முற்றிய நிலையை அடையும்போதுதான் இந்தியர்கள் பலர்தங்களுக்குப் புற்றுநோய் இருப்பதையே தெரிந்துகொள்கின்றனர். எனவே தொடக்கநிலை அறிகுறிகள் தோன்றும்போதே புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதைச் சோதித்துப் பார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டியது அத்தியாவசியமாகிறது. இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7 அன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப்படும் என்று மத்திய சுகாதாரம் அற்றும் குடும்ப நல முன்னாள் அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் அறிவித்தார்.
விண்வெளியில் முதல் தாய்- நவம்பர் 8
முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பெண் சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டைன் தெரஷ்கோவா. 1963-ல் இந்த வரலாறு படைக்கப்பட்டது. இது நடந்து இருபது ஆண்டுகள் கழித்துத்தான் அமெரிக்கா சாலி ரைட் என்ற பெண்ணை விண்வெளிக்கு அனுப்பியது. 1984 நவம்பர் 8-ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஒரு புதியசாதனையைப் படைத்தது. பெண் விண்வெளிவீரர் அன்னா லீ ஃபிஷர் விண்வெளியை அடைந்தார். அப்போது அவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் தாய் என்ற பெருமையை பெற்றார்.
- தொகுப்பு: கோபால்
WRITE A COMMENT