டிஜிட்டல் கில்லாடி ஆகலாம் 3- மைக்ரோபிராஸசர் எனும் சிலிக்கான் செயலகம்


டிஜிட்டல் கில்லாடி ஆகலாம் 3- மைக்ரோபிராஸசர் எனும் சிலிக்கான் செயலகம்

பாலாஜி

மின்னணு பொருட்களில் 5 முக்கிய பகுதிகள் உள்ளன. முதலாவது உள்ளீடு பகுதி (Input), இரண்டாவது செயல்படுத்தும் பகுதி (Processing Unit), மூன்றாவது வெளியீடு பகுதி (Output), நான்காவது மின் சக்தி தரும் பகுதி (Power Supply) மற்றும் ஐந்தாவது சேமிப்பு பகுதி (Storage).

சில மின்னணுப் பொருட்களில் சேமிப்பு பகுதி இருப்பதில்லை. செயல்படும் பகுதி மிகவும் முக்கியமானது. அதுதான் ஒரு மின்னணு பொருளின் செயல்பாட்டை தீர்மானிக்கிறது.

மின்னணுவின் மையம்

இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தை புரிந்துகொள்வது எளிது. கடந்த வாரம் ‘தானாகத்
திறக்கும் கதவுகள்’ குறித்துப் பேசினோம் இல்லையா. அதன் முக்கிய பகுதியே செயல்படும் பகுதிதான். எலக்ட்ரானிக் தொழில்
நுட்ப வளர்ச்சியின் காரணமாக மைய செயல்படும் பகுதி வெறும் 10 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. மேலும் மிகச் சிறிய அளவுகளில் ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் கிடைக்கிறது. இதன் காரணமாக இதை மிகச் சிறிய செயல்படும் பகுதி (மைக்ரோபிராஸசர்) என்
கிறார்கள். இதுதான் இன்றையமின்னணுப் பொருட்களின் முக்கிய பகுதி. இதைக் கொண்டு எந்த மின்னணு பொருளையும் எளிதாக வடிவமைக்க முடியும். இதைப் பற்றிய தெளிவான புரிதல் மின்னணு பிராஜக்ட் செய்வதற்கு மிகவும் அவசியம்.

அதிவேகத்துக்குக் காரணம்

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் சில சிறிய கணித செயல்பாடுகளை செய்ய வல்லது மைக்ரோபிராஸசர். மேலும் இந்த செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் விடையை ஒப்பிட்டு (Compare) மற்ற செயல்களை செய்ய வல்லது. ஒரு செயல்
பாட்டிற்கு தேவையான எண்களை யும் செயல்பாட்டிற்கு பிறகு வரும் விடையையும் சேமித்து வைத்துக்கொள்ள இதில் ஒரு ஞாபகப் பகுதி உள்ளது. இந்த ஞாபகப் பகுதியை ரிஜிஸ்டர் என்கிறார்கள்.

கணித செயல்பாடுகளை அதிகமாக மைக்ரோபிராஸசரால் செய்ய முடியும். உதாரணத்துக்கு, ஒரு வினாடிக்கு 1000 கோடி கணித செயல்பாடுகளைச் செய்ய வல்லது. இந்த வேகம்தான் இன்றைய மின்னணு மற்றும் கணினி தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு காரணம். ஆனால், இதன் பெரிய குறையே, அதனால் சொந்தமாக எதுவும் செய்ய இயலாது.

எண் மொழி

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி என இன்று பயன்பாட்டில் இருக்கும் ஹைடெக் தொழில்நுட்பக் கருவிகள் பலவற்றில் பொருத்தப்பட்டி
ருப்பது மைக்ரோபிராஸசர்தான். இதற்கு ஒரு மொழி உள்ளது. அதுதான் எண் மொழி. மைக்ரோபிராஸசர் வெளியிலிருந்து கட்டளையை பெற்றுச் செயல்படுகிறது. ஆகவே மைக்ரோபிராஸசர் என்பது மூளை அல்ல. அது செயல்படுத்தும் பகுதி மட்டுமே. எளிதாக விளக்குவதானால், மனித மூளையில் உள்ள செயல்படுத்தும் பகுதியுடன் இதை ஒப்பிடலாம். மைக்ரோபிராஸசருக்கு ஞாபகப்பகுதி மூலம்கட்டளை கொடுத்து அதைச் செயல் பட வைக்கிறோம். அப்படியானால்சிலிக்கான் மூளை என்பது எது?

(தொடரும்)

கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்ப பயிற்றுநர்.

FOLLOW US

WRITE A COMMENT

x