ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
டாக்டர் அப்துல் கலாம், ராணுவ விஞ்ஞானியாக ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்’ (Defence Research and Development Organisation-DRDO) பணியாற்றியவர். அந்நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர்.
ஏவுகணையைக் கொண்டு செயற்கைக்கோளை தாக்கி அழித்த ‘மிஷன் சக்தி’ வெற்றியின் மூலம்இந்தியாவை உலகத்தின் வலிமைமிக்க நான்கு நாடுகளில் ஒன்றாகஏற்றம் பெறச் செய்த நிறுவனம் டி.ஆர்.டி.ஓ. ராணுவம், விமானப்படை, கடற்படை, எல்லையோரப் பாதுகாப்பு படை ஆகியவைநாட்டின் வலிமை மிக்க கரங்கள் எனில், டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் பாதுகாப்புத் துறையின் மூளை.
ப்ரித்வி, ஆகாஷ், த்ரிஷூல், நாக் ஆகிய ஏவுகணைகளை உருவாக்கி வரலாறு படைத்தனர் ராணுவ விஞ்ஞானிகள். அக்னி ஏவுகணையும் பிரமோஸ்ஏவுகணையும் அவர்களின் படைப்புகளே. இந்தச் சாதனைகளின் மூலம் பொதுவெளியில் அறியப்பட்ட பல விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் அப்துல் கலாம். இந்த வெற்றிகளின் மூலமாகவே ‘ஏவுகணை நாயகர்’ என்று அழைக்கப்பட்டார் கலாம்.
ராணுவ விஞ்ஞானியின் வேலைபோர்விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், ராணுவ பீரங்கிகள், போர்க்கப்பல்-நீர்மூழ்கி தொழில்நுட்பங்கள், உலோக தொழில்நுட்பங்கள், மீத்திறன் கணினி (Super Computer),உயிர் அறிவியல் தொழில்நுட்பங்கள், மின்னணு தொழில்நுட்பங்கள்,ரோபோடிக்ஸ் என பரந்துபட்ட துறைகளில் ராணுவ விஞ்ஞானியாக நீங்கள் களமாடலாம்.
இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஆய்வு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்டதுறையில் தங்கள் ஆய்வு கவனத்தைக் கொண்டிருக்கும். ஆனால்,டி.ஆர்.டி.ஓ. வானிலும், விண் வெளியிலும், நிலத்திலும், பனிமலையிலும், கடலிலும், கடலுக்கடியிலும் தனதுஆய்வுக்கரங்களை நீட்டி நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறது.
என்ன படிக்க வேண்டும்?பொறியியல் பட்டதாரிகள், அறிவியல் முதுநிலை பட்டதாரிகள், இத்துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ராணுவ விஞ்ஞானி ஆகலாம்.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி உள்ளிட்ட கல்விநிலையங்களில் வளாகத் தேர்வின்(Campus Interview) மூலமாக விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்படுவதும் உண்டு. (பார்க்க: rac.gov.in)எந்தெந்தப் பாடப் பிரிவுகள்?இயந்திரப் பொறியியல், மின்னியல், கட்டிடவியல், கருவியியல், மின்னணு - தொடர்பியல், கணினிஅறிவியல், உலோகவியல், விமானப்பொறியியல், மருத்துவம், இயற்பியல், உயிரியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளைப் படிக்கலாம்.
போர்க்கப்பலில், போர்விமானத்தில், நீர்மூழ்கிக் கப்பலில், ராணுவ டாங்க் வாகனத்தில், பனிமலையில் ராணுவ விஞ்ஞானியாக நான் பெற்ற அனுபவங்கள் பரவசமானவை. சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தமிழ்வழியில் படித்த என்னால் விஞ்ஞானியாக முடிந்தது. உங்களால் நிச்சயம் முடியும். மாணவிகளும் ராணுவ விஞ்ஞானி ஆகலாம். ‘அக்னி புத்ரி’ என்று புகழப்படும் டெஸ்ஸி தாமஸ், ஒரு ராணுவ விஞ்ஞானிதான்.
அப்துல் கலாம் ராணுவ விஞ்ஞானியாவதற்கு முன்பு இஸ்ரோ நிறுவனத்தில் பணிபுரிந்தார். மங்கள்யான், சந்திரயான் போன்ற சாதனைகளைப் படைக்க விண்வெளி விஞ்ஞானியாவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?- (தொடரும்)கட்டுரையாளர், ‘எந்திரத்தும்பிகள்: ஹெலிகாப்டர் ஓர் அறிமுகம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
WRITE A COMMENT