பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
வட இந்திய மாநிலங்களில் ஒன்று உத்தரகாண்ட். ‘உத்தராஞ்சல்' என்றும் சொல்வதுண்டு. இந்த மாநிலத்தின் ஆறுகளில் ஒன்று
தான் ‘அலக்நந்தா'. ‘இது, இமயமலை நதிகள்ல ஒண்ணு' ‘இமயமலை தெரியும். இமயமலை நதின்னு வேற இருக்கா?'
‘ஆமாம். இமயமலை அடிவாரத்துல உற்பத்தியாகி சமவெளிப் பகுதிகள்ல ஓடி வளம் சேர்க்கிற ஆறுகள் நிறைய இருக்கு. இவை
தாம் ‘இமய நதிகள்'. ஆங்கிலத்துல Himalayan Rivers. இதுல ஒண்ணுதான் ‘அலக்நந்தா'.‘அப்போ... இதையும் ஒரு ஜீவ நதின்னு சொல்லலாமா..?'
‘நிச்சயமா. இது ஏன்... வற்றாத ஜீவநதியா இருக்கு...? காரணம் தெரியுமா?'
‘நல்லாவே தெரியும். பருவ காலத்துல, மழை பெய்து தண்ணீர் வரும்; கோடை காலத்துல, இமயமலையில் படிந்துள்ள பனிப்
பாறைகள் (Glaciers) உருகி, அதுல இருந்து குளிர்ந்த நீர் பாய்ந்து வரும். இதனால, ஆண்டு முழுவதுமே, இந்த ஆறுகள்ல தண்ணீர் இருக்கும்'.
‘சரி.., அலக் நந்தா' பற்றிய சில குறிப்புகளைப் பார்க்கலாமா..?’
‘சட்டோபந்த், பகீரதி கரக் என்றுஇரண்டு பனிப்பாறைகள் இருக்கின்றன. இவை உருகி வருகிற பனி நீரில் உருவானது ‘சட்டோபந்த் ஏரி'. தென் இமயமலையில், திபெத்எல்லையை ஒட்டி, கோமுக் கங்கோத்ரிக்கு 13 கி.மீ. தென் கிழக்கே, கடல்மட்டத்தில் இருந்து, சுமார் 6 கி.மீ. உயரத்தில் உள்ளது.
இதுவே, ‘அலக்நந்தா' நதியின், மூலப் புள்ளி. இந்த நதியின் நீளம் 190 கி.மீ. ஆற்றுப் படுகையின் பரப்பளவு 10,882 ச.கி.மீ. (நன்றி: e-uthranchal) இந்த நதியில், 5 கிளை ஆறுகள் சேர்கின்றன.
அவை தாலிகங்கா, நந்தாகினி, பிண்டார், மந்தாகினி, பகீரதி. இவை ஒவ்வொன்றும் அலக்நந்தாவுடன் இணையும் பகுதிகள் முறையே விஷ்ணுபிரயாக், நந்தபிரயாக், கர்ணபிரயாக், ருத்ரபிரயாக் & தேவ்பிரயாக்.
நிறைவுப் புள்ளியான, தேவ பிரயாக் (Deoprayag) சங்கமத்தில் இருந்து, இந்த நதி, நாம் அனைவரும் நன்கு அறிந்த ‘கங்கை' என்று பெயர் கொள்கிறது.
கங்கையின் மேல் பாகம்
மிக சரி. கங்கை நதியின் மேல் பாகம் தான் அலக் நந்தா. இது, கடலில் கலப்பது இல்லை.
மாறாக, கிளை ஆறுகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு, ‘கங்கை' என்கிற புதிய பெயருடன், தனது பயணத்தைத்தொடர்கிறது.இதன் வழி நெடுகிலும், மலைப் பாங்கான எளிதில் அணுக முடியாதபகுதிகள் மிகுந்து உள்ளன. இதனால், இந்த நதியின் மொத்த தூரத்தையும், நதியோடு இணைந்து பயணிப்பது அநேகமாக இயலாத காரியம். இதன்காரணமாகவே, அலக்நந்தா இன்றளவும் மனிதர்களால் அதிகம் மாசு படாத நதியாகவிளங்குகிறது.
அமைதியாய் ஆரவாரம் இன்றி‘அடங்கி' செல்லும் அலக்நந்தாவைக்காணக் கண் கோடி வேண்டும். இயற்கை எழிலை அனுபவிக்க எண்ணுகிற இளைஞர்கள், புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து அறிய விரும்புகிற சிறுவர்கள், ஆர்வலர்கள் தவறாமல் ‘கால் பதிக்க வேண்டிய' நதி இது.
கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்டப் புத்தகங்களை எழுதியவர்.
WRITE A COMMENT