போட்டோஷாப் என்பது அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட அடோப் சிஸ்டம்ஸ் இன்கார்ப்பரேட்டட் என்கிற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ‘வரைகலை மென்பொருள்’ ஆகும். 90-களிலேயே இதன் முதல்பதிப்பு (வெர்ஷன் 1.0 ) உருவாக்கப்பட்டுவிட்டது.
இருந்தாலும் பலதரப்பட்ட மக்கள் இதைப்பயன்படுத்தத் தொடங்கியது என்னவோ 2000-களில்தான். இப்படி போட்டோஷாப் 5.5,போட்டோஷாப் 6.0, போட்டோஷாப் 7.0 என அடுத்தடுத்தவெர்ஷன்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தகுந்தார்போல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன். போட்டோஷாப் மேக் மற்றும் விண்டோஸ் கணினிகளில் இயங்கக்கூடிய ஒரு மென் பொருளாகும்.
போட்டோஷாப் பதிப்பானது சிஎஸ் என்கிற க்ரியேட்டிவ் சூட் பதிப்புகளைத் தாண்டி போட்டோஷாப் சிசி பதிப்புகள் வரத் தொடங்கிவிட்டன. இப்போது கடைசியாக வெளியானது போட்டோஷாப் சிசி 2019 ( வெர்ஷன் 20.0 )சரி, இவ்வாறு அப்டேட் செய்யப்படும் வெர்ஷன்களால் அதைக் கற்பது சவாலாக இருக்கும் என்று நினைத்துநாம் பயப்படத் தேவையில்லை. நமக்குத் தேவை போட்டோஷாப்பின் அடிப்படையான திறன்கள் என்ன? அதை எப்படி நாம் எளிதாகக் கற்கலாம்? என்பதே.
போட்டோஷாப் பற்றி ஓரளவுதெரிந்துகொண்டாலே உங்களுக்குள் அது கூடுதலாக ஒரு திறமையைக் கொண்டுவந்துவிடும். அதில் இன்னும்கொஞ்சம் இறங்கிக் கற்றால்,ஏகப்பட்ட வேலைவாய்ப்புகளை உங்களுக்கு நிச்சயமாக உருவாக்கிவிடக்கூடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த மென்பொருள் ஏதோ போட்டோகிராஃபர்களுக்காகமட்டுமே என்றே பலரும் நினைக்கின்றனர். அது தவறு.
தொழில்ரீதியிலான ஒரு புகைப்படக்காரர், கிராஃபிக் டிசைனர், லே அவுட் டிசைனர்,வீடியோ கேம் உருவாக்குபவர், அனிமேஷன் படங்களைத் தயாரிப்பவர், விளம்பரப் பதாகைகளைத் தயாரிப்பவர், ஓவியர், காமிக்ஸ் உருவாக்குபவர் என இந்தமென்பொருளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும்நீளமானது. எனவே இந்தபோட்டோஷாப்பை அனைத்துஇளைஞர்களும் ஓர் எஸ்ட்ராகரிக்குலர் ஆக்டிவிட்டியாக கற்றுக்கொள்வதில் நிறைய நன்மைகளே உள்ளன. அதைஅடுத்த வாரம் முதல் நாம் கற்கத் தொடங்கலாம்!
- வெங்கி
WRITE A COMMENT