ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
‘பறவைகள் பறப்பது எப்படி?’ என வகுப்பைத் தொடங்கினார் அறிவியல் ஆசிரியர் சிவசுப்ரமணிய ஐயர். பறவையின் படத்தைக் கரும்பலகையில் வரைந்து சிறகுகளையும் வாலையும் பயன்படுத்தி அது எப்படிப் பறக்கிறது என விளக்கினார். அதோடு நிற்காமல், அதே நாளில் மாணவர்கள் அனைவரையும் அருகிலிருந்த கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே கூட்டமாகப் பறந்து சென்ற பறவைகளை அவர்களுக்குக் காட்டினார்.சிறகுகளை அசைப்பதன் மூலம் அவை
எப்படி பறக்கின்றன, வாலையும் சிறகுகளையும் ஒரு சேர இயக்குவதன் மூலம் திசை மாறிப் பறப்பது எப்படி என விளக்கினார்.
சுவாரசியங்கள் பல…
அந்த மாணவக் கூட்டத்திலிருந்து ஒரு மாணவனுக்கு அந்த நாள் மாபெரும் திருப்பு முனையாக மாறியது. வானத்தின் மீதும் விண்வெளி மீதும் கிளர்ந்த கட்டுக் கடங்காத ஆவல், அம்மாணவனைப் பின்
னாளில் ஏவுகணை நாயகனாக்கியது.
ஆம்! இது ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சிறகடித்த கதை. வகுப்பறைக்கு வெளியே அறிவியலின் தத்துவங்களை அனுபவிக்கிறபோது அதன் சுவாரஸ்யமே தனி. நியூட்டனின் மூன்றாம் விதியை 2 மார்க் கேள்வியாகவும் பார்க்கலாம், சந்திரயான்-2 ஆகவும் பார்க்கலாம். அன்றாட வாழ்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறது அறிவியல் பாடப் புத்தகம்.
அவற்றை பிரித்து பார்க்கும் நிமிடங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும். அப்படிவாராவாரம் உங்களை அழைத்துச் சென்று அறிவியலின் பயன்பாடுகளையும் அதனால் மனிதகுலம் பெற்றிருக்கும் அனுகூலங்களையும் காட்டுவதே ‘அட்டகாசமான அறிவியல்’.
மனித உயிரைக் காக்க
போர்க்களங்களில் எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்கக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும். ஆனால், போர் பதற்றம் தீர்ந்த பிறகும் கண்ணிவெடிகள் அகற்றப்படாமலே இருப்பது ஆபத்தானது. இப்படி அகற்றப்படாத கண்ணி வெடிகளில் சிக்கி உயிரையும் உடல் உறுப்புகளையும் இழப்பவர்கள் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர். இதில் ஐந்தில் ஒரு பங்கு, சிறுவர் சிறுமியர்கள் என்கிறது யுனிசெஃப் நிறுவனத்தின் கணக்கீடு.
புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடியில் தவறுதலாகக் கால்வைக்கும் போது வெடித்துவிடும். கால் வைக்கும் போது ஏற்படும் அழுத்தமே கண்ணிவெடியை உசுப்பும். எப்படிக் கண்ணி வெடிதாக்குதலிலிருந்து தப்பிப்பது? கால்
வைக்கும்போது ஏற்படுகிற அழுத்தத்தைக் குறைத்தால் கண்ணிவெடி உசுப்பப்படுவதைத் தடுக்கலாம். எப்படி அழுத்
தத்தைக் குறைப்பது? சுலபம்.
அழுத்தம் என்பது ஒரு பரப்பளவின் மீதுசெயல்படுகிற விசை. 40 கிலோ எடையுள்ள ஒரு சிறுவனின் இரு கால்களிலும் தலா 20 கிலோ விசை காலணியின் பரப்பில் செயல்படும். நடக்கும்போது காலணிகள் நிலத்தில் செலுத்தும் அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமெனில் இரண்டு விஷயங்களைச் செய்யலாம். ஒன்று விசையைக் குறைக்க வேண்டும்.
அல்லது பரப்பளவை அதிகரிக்க வேண்டும். சிறுவனின் எடையைக் குறைக்க முடியாது, எனவே விசையைக் குறைக்க முடியாது. பரப்பளவை அதிகரிக்க அகலமான அடிப்பாகமுள்ள காலணிகளை அணியலாம். கண்ணிவெடியிலிருந்து தப்பவும் இப்படி அகலமான காலணிகளை ராணுவ வீரர்கள் அணிகிறார்கள். அறிவியல் கருதுகோல்கள் மதிப்பெண்
களுக்காக மட்டுமல்ல மனித உயிரைக் காக்கவும் பயன்படுகின்றன.
ஒருமுறை மும்பையிலுள்ள கப்பற்படை தளத்தில் நீர்மூழ்கி கப்பலுக்குள் சென்றேன்.
அந்த அனுபவங்கள்...மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கதை, கவிதை, ஓவியம், ஒளிப்படம், நகைச்சுவைத் துணுக்குகள் வரவேற்கப்படுகின்றன. உடன் மாணவரின் புகைப்படம், பள்ளி முதல்வர்/ தலைமையாசிரியர் கையெழுத்திட்ட சான்றிதழை அனுப்புங்கள்.
மின்னஞ்சல்: vetricreations@hindutamil.co.in
அஞ்சல் மூலம் கடிதம் அனுப்ப: ஆசிரியர் இலாகா, இந்து தமிழ் திசை, வெற்றிக் கொடி, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 2.
மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கதை, கவிதை, ஓவியம், ஒளிப்படம், நகைச்சுவைத் துணுக்குகள் வரவேற்கப்படுகின்றன. உடன் மாணவரின் புகைப்படம், பள்ளி முதல்வர்/ தலைமையாசிரியர் கையெழுத்திட்ட சான்றிதழை அனுப்புங்கள். மின்னஞ்சல்: vetricreations@hindutamil.co.in |
(தொடரும்)
- கட்டுரையாளர், ‘ஏவுகணையும் கொசுக்கடியும்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
WRITE A COMMENT