ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை


ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை

பொருளாதார பின்னடைவின் காரணத்தினால் எந்த குழந்தைக்கும் கல்வி மறுக்கப்பட்டுவிடக்கூடாது. இதை மனத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களின் படிப்புக்கு உதவித்தொகை, ஊக்கத்தொகை அளிக்கும் திட்டங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

1-ஆம் வகுப்பு தொடங்கி 10-ஆம் வகுப்புவரை உள்ள சிறுபான்மையினப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை உதவித் தொகை அளிக்கிறது. இதுவரை படித்த வகுப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.100-லிருந்து ரூ.600 வரை பராமரிப்பு தொகையாகவும், ரூ. 500 கல்விக் கட்டணத்துக்காகவும் வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15 அக்டோபர் 2019

விண்ணப்பிக்க: http://b4s.in/vetrikodi/PMS9

FOLLOW US

WRITE A COMMENT

x