ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை


ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை

பள்ளி மாணவர்களின் படிப்புக்கு உதவித்தொகை, ஊக்கத்தொகை அளிக்கும் அரசுத் திட்டங்கள், தனியார் தொண்டு நிறுவனங்களின் திட்டங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

சிறுபான்மையின மாணவிகளுக்கு நிதி!
முஸ்லிம், கிறிஸ்தவம், சீக்கியம், பவுத்தம், சமணம், பாரசீகம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கிறது இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை.பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித் தொகைத் திட்டத்தால் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவிகள் பயனடையலாம்.

இதற்கு விண்ணப்பிக்க, முந்தைய வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவிகளில் 9, 10-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5,000, பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15 அக்டோபர் 2019
கூடுதல் விவரங்களுக்கு: b4s.in/vetrikodi/MAN1
விண்ணப்பிக்க: bhmnsmaef.org/maefwebsite/

FOLLOW US

WRITE A COMMENT

x