காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பஞ்சத்தின் காரணமாக விவசாய உற்பத்தி குறைந்து உணவு தானியங்களின் விலை மாதம் ஒருமுறை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவின் தேசிய வறுமை விகிதம் 2040இல் 3.5% அதிகரித்திருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்விளைவாக ஆண்டுக்கு 5 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுவது நம் கண்களுக்குத் தெரியாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
காலநிலை மாற்றம் கடலையொட்டி வாழும் தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் பாதித்துள்ளது. கடலோர கிராமப் பெண்கள் நீண்ட நேரம் கடலில் நின்று மீன், நண்டு, சிப்பிகளைச் சேகரிக்கின்றனர். ஆனால், தற்போது உயர்ந்து வரும் கடலின் உப்பு அளவு அவர்களுக்கு உடல்நல உபாதைகளை ஏற்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.
WRITE A COMMENT