டிங்குவிடம் கேளுங்கள் 58: இருட்டறையில் அடைத்தால் சேவல் கூவுமா?


டிங்குவிடம் கேளுங்கள் 58: இருட்டறையில் அடைத்தால் சேவல் கூவுமா?

இரவு பகல் தெரியாமல் ஒரு சேவலை இருட்டறையில் இரண்டு நாட்கள் வைத்திருந்தால், அது கூவாதுதானே டிங்கு? - லெ. மாணிக்கம், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர்.

சுவாரசியமான கேள்வி. சேவல் அதிகாலை விடிவதைப் பார்த்து, ‘கொக்கரகோ’ என்றுகூவுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக் கிறீர்கள். ஆனால், சேவல் விடியலைப் பார்த்துக் கூவுவதில்லை.

சேவலின் உடலில் இருக்கும் ‘உயிர்க் கடிகாரம்’ (Biological Clock) தான் புறச்சூழல் எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கூவச் செய்துவிடுகிறது.

அதாவது பகல் என்பதே தெரியாத மாதிரி இரண்டு நாட்கள் இருட்டறையில் வைத்திருந்தாலும் அதிகாலை நேரம் சேவல் கூவவே செய்யும். சேவல் மட்டுமில்லை, நம்மையும் இரண்டு நாட்கள் செயற்கை வெளிச்சத்தில் இரவே தெரியாமல் வைத்திருந்தாலும் இரவு நேரம் வரும்போது தூங்கிவிடுவோம்.

விடியல் வரும்போது விழித்துவிடுவோம். புறச்சூழல் எப்படி இருந்தாலும் உயிர்க்கடிகாரம் நம்மை வழக்கமான செயல்களைச் செய்ய வைத்துவிடும், மாணிக்கம்.

FOLLOW US

WRITE A COMMENT

x