ஆசிரியை நோவாக் கையை நீட்டுகிறார். ஒரு குழந்தைதயங்கியபடியே மறைத்து வைத்ததை எடுத்து நீட்டுகிறான். ஒரு லைட்டர்."சிகரெட் பிடிப்பீங்களா?" என்று கேட்கிறார். ஒருவன் இல்லை என்று சொல்ல ஒரு சிறுமி வேறொரு போதைப்பொருளைச் சொல்லுகிறாள். நோவாக் குழம்புகிறார். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு மாலையில் லைட்டரைத் திருப்பித் தருவதாகக் கூறுகிறார்.
வகுப்பறை. சிறு தேர்வு. அலியின் நடவடிக்கைகள் சந்தேகமாக இருக்கின்றன. நோவாக் எழுந்து சென்று பார்க்கிறார். ஆசிரியர் வருவதைப் பார்த்ததும் அலி எதையோ மறைக்க முயல்கிறான். பிட் பேப்பர். அலி தேர்வெழுதிய தாளை வாங்கிக்கொண்டு வேறுதாளைக் கொடுக்கிறார்.
WRITE A COMMENT