2023-ம் ஆண்டு வெளியான ஜெர்மானிய திரைப்படம், The Teachers Lounge. இப்படம், பள்ளிகளில் நடைபெறும் ஒரு நுட்பமான சிக்கலைப்பற்றி விரிவாக அலசுகிறது. தமிழில் இப்படி பள்ளி சார்ந்த ஒரு சிக்கலை எடுத்துக் கொண்டு விரிவாக அலசிய திரைப்படம் வந்திருக்கிறது என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். 'குற்றங்கடிதல்' என்ற அத்திரைப்படம் குறித்துக் கல்வி மேல் அக்கறை கொண்டோரும், ஆசிரியர்களும், குழந்தைகளும், பெற்றோரும் கலந்துரையாட வேண்டியது அவசியம். இப்போது The Teachers Lounge படத்தைப் பார்ப்போம்.
ஆசிரியை கார்லா நோவாக் ஓர் அறைக்குச் செல்கிறார். அங்கே இரண்டு ஆசிரியர்களும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். அக்குழந்தைகளைப் பார்த்து, "உங்களுக்கு தெரிந்ததைச் சொல்லுங்கள். வகுப்பு மாணவர் பிரதிநிதிகள் என்பதால் உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது" என்று ஓர் ஆசிரியர் கூறுகிறார்.
WRITE A COMMENT