விஜய் சார் வீடு. குழந்தைகளும் இளம் பருவத்தினரும் தடை ஏதும் இல்லாமல் தங்கள் மனதுள் இருப்பதை பகிர்கிறார்கள். விஜய் சார் காட்டிய நம்பிக்கையின் வெளிப்பாடு. வெளியே கொட்டுவது மனதை லேசாக ஆக்கும். பகிர்தல் இனிது!
சேரி மைதானத்தில் விளையாடிமுடித்து அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். "போட்டி நல்லா இருந்துச்சு. இன்னொரு போட்டி விளையாடலாம் சார்!" என்று விஜய் சாரிடம் ஒரு சிறுமி கூறுகிறாள். அடிக்கடி அவர்களோடு விளையாட வேண்டாம். வேறு ஏதாவது போட்டியைத் தேடலாம் என்று விஜய்சார் கூறுகிறார். பெரிய அளவில் நிறைய அணிகளை அழைத்து ஒரு போட்டியை நடத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.
WRITE A COMMENT