டிங்குவிடம் கேளுங்கள் - 55: கானல் நீர்மாயத் தோற்றமா?


டிங்குவிடம் கேளுங்கள் - 55: கானல் நீர்மாயத் தோற்றமா?

கானல் நீர் எவ்வாறு உருவாகிறது, டிங்கு? - ஆர். சீனிவாசன், 7-ம் வகுப்பு, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

கடுமையான கோடைக் காலத்தில் தார் சாலைகளிலும் பாலைவனங்களிலும் கானல் நீரைப் பார்க்க முடியும். தண்ணீர்தான் இருக் கிறது என்று அருகில் சென்றால், இன்னும் சற்று தொலைவில் கானல் நீர் தெரியும். இது ஒரு மாயத் தோற்றம். நிலத்தில் இருந்து அதிகமான வெப்பம் மேலே வருகிறது.

மேலே இருக்கும் காற்று சற்றுக் குளிர்ச்சியாக கீழ் நோக்கி வருகிறது. இவை இரண்டையும் ஊடுருவிக்கொண்டு சூரிய ஒளிக்கதிர்கள், வெப்பத்திலும் குளிர்ச்சியிலும் வெவ்வேறு வேகத்தில் நுழைகின்றன. அப்போது ஒளிக் கதிர்கள் வளைகின்றன. இதை நம் மூளை நிலத்திலிருந்து தண்ணீர் தோன்றுவதுபோல் எண்ணிக் கொள்கிறது, சீனிவாசன்.

உடலில் உள்ள எலும்பு முறிந்து விழுந்தால், மீண்டும் அந்த எலும்பு வளருமா, டிங்கு? - குகன் சரவணன், 3-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

சாதாரணமாக எலும்பு முறிந்தால், சிகிச்சைக்குப் பிறகு குறிப்பிட்ட காலத்துக்குள் சேர்ந்துவிடும். ஆனால், ஏதோ விபத்தின் மூலம் துண்டாக எலும்பு முறிந்துவிட்டால், மீண்டும் வளராது, குகன் சரவணன்.

FOLLOW US

WRITE A COMMENT

x