பொதுவாக, குளிர் காய்ச்சலுடன் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு, மருந்துகள் மட்டுமன்றி போதிய தண்ணீரும் எளிதாகச் செரிமானமாகும் உணவு வகைகளும், குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்களும் மிகவும் அவசியம். அத்துடன் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் மாஸ்க் அணிவதும், வயதானவர்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்கள் உள்ள வீடுகளில் நோயைக் கட்டுப்படுத்த வேண்டி, மருத்துவர் பரிந்துரையுடன் ஆஸல்டமிவிர் மருந்தினை (chemoprophylaxis) உட்கொள்வது நலம்.
இறுதியாக, இந்த நோய் வராமலே தடுக்க முடியுமா என்றால், அதற்கு உதவுபவை தான் தடுப்பூசிகள். ஃப்ளூ தடுப்பூசிகளை பருவமழைக் காலம் வரும் முன்னரே, அதாவது செப்டம்பர் மாதத்திற்கு முன்னரே போடுவது நல்லது. மேலும் ஃப்ளூ வைரஸும் கரோனா போலவே ஒரு ஆர்என்ஏ வைரஸ் தான். அதாவது, இந்த வகை வைரஸ்கள் தம்மைத் தாமே மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை (antigenic drift) என்பதால் அவற்றுக்கான தடுப்பூசியை, Category B வகையினருக்கு மட்டும் வழங்க அரசு அறிவுறுத்துகிறது.
WRITE A COMMENT