குழந்தைகள் கேட்கும் வினாக்கள் பல நேரத்தில் ஆசிரியர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது. அந்த வகையில் குழந்தைகள் கேட்ட சில முக்கியமான வினாக்களைப் பார்ப்போம். வாசிக்கும் போது குறிப்பேடு, பேனாவோடு இருக்க வேண்டியது ஏன், எந்தெந்த கருத்துகள் வரும்போது குறிப்பெடுக்க வேண்டும் வகுப்பில் ஆசிரியர் தீவிரமாக விளக்கிக் கொண்டிருந்தார்.
ஆனால் நான்கைந்து மாணவர்கள் ஆசிரியரின் பேச்சைக் கவனிக்காமல் கேலிப்புன்னகையோடு தங்களுக்குள் மெதுவாகப் பேசிக்கொண்டார்கள். பேச்சை இடையில் நிறுத்திய ஆசிரியர் நான் சொன்ன கருத்துகளில் சிரிக்க என்ன இருக்கு? என்று கேட்டார்.
WRITE A COMMENT