டிங்குவிடம் கேளுங்கள் 52: எலுமிச்சை பழம் ஏன் மிகவும் புளிப்பாக இருக்கிறது?


டிங்குவிடம் கேளுங்கள் 52: எலுமிச்சை பழம் ஏன் மிகவும் புளிப்பாக இருக்கிறது?

மரகதப்புறா ஏன் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக இருக்கிறது, டிங்கு? - கே. திவ்யா, 8-ம் வகுப்பு, ஆதர்ஷ் வித்யா கேந்திரா, நாகர்கோவில்.

இந்தியாவில் சுமார் 30 வகை புறாக்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் சுமார் 12 வகை புறாக்கள் உள்ளன. இவற்றில் பச்சை வண்ண உடலுடன் இருக்கும் மரகதப்புறா மிக அழகாக இருக்கும். சமீப ஆண்டுகளில் இந்தமரகதப் புறாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உலக இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு, மரகதப் புறாவை அழியும் நிலையில் இருக்கும் பறவைகளில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. மரகதப் புறாவைத் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக அங்கீகரிப்பதன் மூலம், இதற்குக் கூடுதல் கவனம் கொடுத்துப் பாதுகாக்க முடியும், திவ்யா.

எலுமிச்சை ஏன் இவ்வளவு புளிப்பாக இருக்கிறது, டிங்கு? - சி.என். ராஜேஷ், 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர்.

பழங்களில் சிட்ரிக் அமிலம் இருக்கும். அதுதான் பழத்துக்குப் புளிப்புச் சுவையைத் தருகிறது. அந்த சிட்ரிக் அமிலம் எலுமிச்சையில் அதிக அளவில் இருப்பதால், மற்ற பழங்களைப் போல் நம்மால் அதை நேரடியாகச் சாப்பிட முடியாது. அதாவது சிட்ரிக் அமிலம் 5-6 சதவீதமாகவும் ஹைட்ரஜனின் அளவு 2.2 சதவீதமாகவும் இருப்பதால் எலுமிச்சைக்குப் புளிப்புச் சுவை அதிகம் ராஜேஷ்.

FOLLOW US

WRITE A COMMENT

x