ரஷ்யாவின் புகழ்பெற்ற ஓவியர் வசீலி கண்டீன்ஸ்கி. இவர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் 1866-ல் பிறந்தார். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டத்திலும், பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார். டார்பட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். சிறுவனாக இருந்தபோது, எல்லோருக்கும் நிறங்கள் தோன்றுவது போல் இல்லாமல், நிறங்களை நோக்கி ஈர்க்கப்பட்டதை நினைவுபடுத்திக் கொண்டார். நினைவுகளின் வளர்ச்சியோடு, நிறங்கள் குறித்த ஈர்ப்பும் வளர்ந்துகொண்டே இருந்தது. தனது 30 வயதில் ஓவிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
1896-ல் மியூனிக் நுண்கலைகளை பயற்சி பட்டறையில் கற்றார். பின்னர், 1922 முதல் 1933 வரை ஓவியம் கற்பித்தார். காண்டின்ஸ்கியின் தனிப்பட்ட கலை அனுபவங்கள் அடிப்படையில் ஓவியங்கள் கோட்பாடுகளோடு வளர்ந்தன. அவை சிந்தனை முதிர்ச்சியினாலும், நீண்ட கால வளர்ச்சியின் அடிப்படையிலும் இருந்தன. 1889-ல் இனவரைவியல் ஆய்வுக்குழுவின் உறுப்பினராக இருந்தார். 1933-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற அவர் நெயுல்லி-செர்-செயின் என்னுமிடத்தில் 1944 டிசம்பர் 13-ல் காலமானார்.
WRITE A COMMENT