எத்தனையோ நான்கு கால் விலங்குகள் இருந்தாலும் ஏன் மாடுகளை மட்டும் உழவுக்குப் பயன்படுத்துகிறார்கள், டிங்கு? - சு.அ. யாழினி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா, திருச்சி.
மனிதர்களோடு இணைந்து வாழ, மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளில் ஒன்று மாடு. பொதுவாக மாடுகள் சாதுவானவை. தீவனம் கொடுத்துவிட்டால், நன்றாக உழைக்கக்கூடியவை. மாடுகளின் சிறுநீர், சாணம் போன்றவை நிலத்துக்கு உரமாகின்றன. அதனால், டிராக்டர் கண்டுபிடிக்கப்படும் வரை மாடுகளை வைத்தே மனிதர்கள் விவசாய வேலைகளைச் செய்து வந்தார்கள். இப்போதும் சிறு விவசாயிகள் மாடுகளையே நம்பியிருக்கிறார்கள். மாடுகளை கலப்பையில் கட்டி, நிலத்தை உழலாம். விளைந்த பொருள்களை மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் எடுத்துச் செல்லலாம். மாடுகளைப் பராமரிப்பதும் உணவு அளிப்பதும் எளிது. அதனால், மனிதர்கள் மாடுகளை விவசாயத்துக்குப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பார்கள். மாடுகள் செய்யக்கூடிய வேலைகளை வேறு எந்தெந்த விலங்குகளால் செய்ய முடியும் என்று யோசித்துப் பாருங்கள், யாழினி.
WRITE A COMMENT