ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, அரசு வீட்டைக் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. காஷ்மீர் முதல்வராக 2016-ம் ஆண்டு முதல் 2018 வரை முதல்வராக இருந்தவர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரான மெகபூபா முப்தி. முதல்வராக இவர் பதவி வகித்தபோது அனந்த்நாக் மாவட்டத்தின் கனாபல்லில் உள்ள வீட்டுவசதி வாரியத்தில் இவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகும் இன்னும் அவர் அந்த வீட்டைக் காலி செய்யவில்லை. எனவே அனந்த்நாக் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 24 மணி நேரத்தில் அரசு வீட்டை காலி செய்யுமாறும் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அனந்த்நாக் மாவட்ட துணை கமிஷனரின் உத்தரவின் பேரில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.
WRITE A COMMENT