தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் செ.சண்முகையா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) திருப்பூரில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தின்போது கூட 108 ஆம்புலன்ஸ்தான் உடனடியாக சென்றது. தினமும் 15 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. எனவே, புதிதாக 200 ஆம்புலன்ஸ்களை வாங்க இருக்கிறோம்.
உபர், ஓலா போன்ற வாகனங்களில் இருப்பது போல 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்ததும், அது எங்கு வந்து கொண்டிருக்கிறது, ஓட்டுநர் பெயர், செல்போன் எண் ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ள 2 மாதங்களில் செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
WRITE A COMMENT