அமெரிக்காவின் தனியார் விண்வெளிநிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் வணிக ரீதியாகவும், தங்களின் சொந்த செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் அதிவேகஇணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. முதற்கட்டமாக புளோரிடாவில் இருந்து தலா 260 கிலோ எடையிலான 60 செயற்கைக் கோள்களை கடந்த ஆண்டு மே மாதம்விண்ணில் செலுத்தியது. இதனைத்தொடரந்து, 2-ம் கட்டமாக மேலும் 60 செயற்கை கோள்களை கேப் கேனவெரலில் இருந்து விண்ணில் செலுத்தியது.
இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ்நிறுவனம் மேலும் 60 செயற்கைக்கோள்களை பால்கான்-9 ராக்கெட் மூலம் புளோரிடாவின் கேப் கேனவெரலில் இருந்து நேற்று காலை 10:05 மணிக்கு விண்ணில் செலுத்தியது.
இந்த புதிய செயற்கை கோள்கள் அனைத்தும், ஏற்கெனவே அனுப்பப்பட்ட செயற்கை கோள்களுடன் இணைந்து செயல்பட உள்ளன. இதே போல் மேலும் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களை செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ராக்கெட்டான பால்கான்-9, செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி விட்டு, பூஸ்டரை மீண்டும் பூமிக்கு பத்திரமாக தரையிறங்கும் வசதி கொண்டது. ஆனால், தற்போது விண்ணில் செலுத்தப்பட்ட பால்கான் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறங்கவில்லை. பால்கான் இதுவரை 49 முறை வெற்றிகரமாக தனது பூஸ்டரை தரையிறக்கி உள்ளது. தற்போது ராக்கெட் பூஸ்டர் தரையிறங்கிருந்தால், 50 முறை வெற்றிகர மாக தரையிறக்கப்பட்டது என்றசாதனையை படைத்திருக்கும். இதுபோன்று ராக்கெட் பூஸ்டரை மறு உபயோகம் செய்யும்போது, செலவு பாதியாக குறையும்.
இதுதொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி பொறியாளர் ஜெசிகா ஆண்டர்சன் கூறுகையில், “விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டின் முதல் பகுதி வெற்றிகரமாக பூமிக்குதிரும்பியது. ஆனால், துரதிருஷ்டவசமாக, விமான தாங்கி கப்பலில் முதல்கட்டம் தரையிறக்கவில்லை. கப்பலுக்குஅருகே தண்ணீரில் விழுந்தது” என்றார்.
தற்போது அனுப்பட்ட 60 செயற்கைக்கோள்களைச் சேர்த்து ஸ்டார் லிங்க்திட்டத்துக்காக சுமார் 480 செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT