தேசிய அறிவியல் திருவிழாவில் உடுமலை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு


தேசிய அறிவியல் திருவிழாவில் உடுமலை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அறிவியல் திருவிழாவில் உடுமலை பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

5-வது தேசிய அறிவியல் திருவிழா கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்றது. இதில்முக்கிய நிகழ்வாக மாணவர் அறிவியல் கிராமம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து 5 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியரை தேர்வு செய்து அனுப்பி வைத்தனர்.

இரண்டாயிரம் மாணவர்கள்

இந்தியா முழுவதும் இருந்து சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தில் இருந்துசுமார் 300 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி தொகுதியில் இருந்துஉடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணியூர் வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் ஆசிரியர்கள் சிவக்குமார், அங்கயற்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, தேசிய ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:அறிவியல் கிராமம் நிகழ்வில் இயற்பியல் சோதனைகள், வேதியியல் சோதனைகள், கணிதமும் எளிமை, விஞ்ஞானியுடன் கலந்துரையாடல், அறிவியல் நகரம் , கண்காட்சி பார்வையிடல், மற்றும் இரவு வான்நோக்கும் நிகழ்வு ஆகியவை4 நாட்களாக நடைபெற்றது. 2,000 மாணாக்கர்களும் 6 விஞ்ஞானிகளின் பெயர்களில் 6குழுக்களாக பிரிக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றது. மாணவர்கள் இடையே அறிவியல்விழிப்புணர்வையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும் என்பதே இந்நிகழ்வின் முக்கியமான நோக்கமாக அமைந்தது. ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறையில் உடுமலை பகுதியில் இருந்து அரசுக் கலைக் கல்லூரி பேராசிரியர்கள் திருமாவளவன் மற்றும் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் அறிவியல் வளர்ச்சியை பற்றியும் , தங்களின் வாழ்க்கையில் அவர்கள் எவ்வாறு அறிவியல் துறையில் முன்னேறலாம் என்பதையும் அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநில மாணவ,மாணவிகளும் கலந்தகொண்டதன் மூலம் இந்திய கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறை ஆகியவற்றையும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

WRITE A COMMENT

x