அறிவியலை காமெடி மூலம் எளிமையாக்கும் ‘பெண் காமெடியன்’


அறிவியலை காமெடி மூலம் எளிமையாக்கும் ‘பெண் காமெடியன்’

அமெரிக்கா

சினிமாவில் வரும் காமெடிகளை தாண்டி, உலக முழுவதும் ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ எனப்படும், மேடை காமெடிகள் மிக பிரபலம். ஒரு குழுவாக மேடையில் பல மணி நேரம் நடித்தால் அது நாடகம். ஆனால், பல மணி நேரம் தனி ஆளாக நின்று பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் ஜோக்குகளையும், வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை ரசனையாக வும் பேசி சிரிக்க வைப்பதே ‘ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ’.

அப்படிதான் இந்திய வம்சாளியை சேர்ந்த 28 வயதான அமெரிக்க இளம்பெண் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார். இணையதளத்தில் கட்டுரை பதிவு செய்யும் விஞ்ஞானி எழுத்தாளர் காஷா படேல்தான் அந்த ‘ஒன் உமன் ஆர்மி’.

காலையில் பொறுப்பாக தனது வேலையை நாசாவில் முடித்துவிட்டு, மாலையில் மேடை ஏறினால் இரவு முழுவதும் அரங்கை ஒற்றை ஆளாக நின்று அசத்தும் அசாத்தியவாதிதான் காஷா.

இவரின் காமெடி ஷோக்கள் யூடியூப்பேஸ்புக் என பல சமூக வலைத்தளங்களில் எப்போதும் வைரல்தான். உலகில் பல ஸ்டாண்ட் அப் காமெடியர்கள் இருக்கும்போது காஷா மட்டும் ஏன் இவ்வளவு பேசப்படுகிறார் என்றால் அதில்தான் அவரின் தனித்துவம் இருக்கிறது. காஷா ஒரு விஞ்ஞானி என்பதால், தனது ஸ்டாண்ட் அப் ஷோக்களில், அறிவியலை அள்ளி தெளித்து விடுகிறார்.

இதுகுறித்து காஷா, “அறிவியலை பற்றி இருக்கும் உண்மைக்கும், தவறான பிம்பத்தையும் விளக்குவதுதான் எனது வேலை” என்று கூறுகிறார்.

விஞ்ஞானம், நகைச்சுவை என்றஇரண்டையும் ஒன்று சேர்த்து பயணித்து வருகிறார். நகைச்சுவை உணர்வு தற்போது மோசமான நிலையில் உள்ளது. அதை அறிவார்ந்த நகைச்சுவை வழியாக இரண்டுக்கும் ஊக்கம் அளிக்கிறார். இதன் காரணமாகதான் காஷாமிகவும் பிரபலமாகி வருவதாக பிரபல வானியலாளர் கார்ல் சாகன் கூறுகிறார். இவரின் விஞ்ஞான நகைச்சுவை உணர்வை வியந்து, நாசாவின் மிகப்பெரிய விஞ்ஞானிகளும், தங்களின் வேலைகளை நகைச்சுவை உணர்வோடு கவனிக்கிறார்கள். அதுபோல அறிவியல் மாணவர்கள் காஷாவை வியந்து பார்க்கிறார்கள்.

விஞ்ஞானத்தில் உள்ள சிக்கலானகருத்துக்களைத் தொடர்புகொள்வதற்கு, சிரிப்பு ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில், அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் - காமெடியன்களை இணைத்து, டிசி சயின்ஸ் நிறுவனம் காமெடி ஷோக்களை நேரடி நிகழ்ச்சியாக(Live) நடத்தி வருகிறது. அதில் முக்கியமான விஞ்ஞான காமெடியன் காஷாதான்.

காஷாவின் ‘போதை அறிவியல்’ என்று காமெடி ஷோ, மனித மூளைபோதையில் இருந்தால், அது எவ்வாறுசெயல்படும் என்று விளக்கியது. தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை அறிவியலோடு தொடர்புபடுத்தி, அதை காமெடியாக கூறுகிறார்.

இதுகுறித்து காஷா கூறுகையில், “சில ஆண்டுக்கு முன்பாக நான் சாதாரண ஜோக்குகளையும், அறிவியலை தொடர்பு படுத்திய ஜோக்குகளையும் ஒரு நிகழ்ச்சியில் கூறினேன். எந்த ஜோக்குகளுக்கு மக்கள் அதிக நேரம்சிரிக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் எடுத்தேன். அதில், அறிவியல் சம்பந்தமான ஜோக்குகளுக்குதான் 40 சதவீதம் அதிகமாக சிரிக்கிறார்கள்.

விஞ்ஞானம், அறிவியல் மூலம்தான் உலகம் இயங்குகிறது. விஞ்ஞானிகளுக்கு பெரும் நிதி வழங்கப்பட்டாலும், அவர்களின் ஆராய்ச்சிகள், பெரும்பாலும் நிபுணர் மாநாடுகள் அல்லது பெரிய தொகை கொடுக்கும் பத்திரிகைகளில் மட்டுமே இடம் பெறுகிறது. மக்களிடம் செல்வதே இல்லை.

அறிவியலை மக்களிடம் கொண்டு செல்ல நகைச்சுவை ஒரு பெரிய வழியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் ” என்றார்.

FOLLOW US

WRITE A COMMENT

x