திருவள்ளூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: பள்ளி மாணவர்கள் 18 பேரின் ஆய்வுக் கட்டுரைகள் மாநில போட்டிக்கு தேர்வு


திருவள்ளூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: பள்ளி மாணவர்கள் 18 பேரின் ஆய்வுக் கட்டுரைகள் மாநில போட்டிக்கு தேர்வு

சென்னை

திருவள்ளூரில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 18 பேரின் ஆய்வுக் கட்டுரைகள் மாநில போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் திருவள்ளூர் மாவட்ட மாநாடு திருவள்ளூரில் நடைபெற்றது. 300 மாணவர்கள் பங்கேற்புஇந்த மாநாட்டில், திருவள்ளூர், வில்லிவாக்கம், திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 300 பேர் சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம், புவி வெப்பமடைதல், மாற்று எரிபொருள், மாற்று உணவு முறை உள்ளிட்ட 180 தலைப்புகளின்கீழ் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

அந்த கட்டுரைகளை, 60-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து மதிப்பீடு செய்தனர். அதன் அடிப்படையில், 9 மாணவர் குழுக்களைச் சேர்ந்த 18 மாணவர்களின் கட்டுரைகள் மாநில அளவிலான அறிவியல் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன.

சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு

மாநாட்டின் நிறைவில், தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்வேலாயுதம், மாவட்ட தலைவர் கலைநேசன், துணைத் தலைவர் சாந்தகுமாரி, செயலாளர் மோசஸ்பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x