திண்டுக்கல்
திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் நடந்த பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சியில் புதுமையான படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆகியதுறைகள் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியை கல்லூரியின்முதல்வர் பாலகுருசாமி தொடங்கி வைத்தார். இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் (9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை) தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். மேலும் பார்வையாளர்களுக்கு செயல் விளக்கமும் அளித்தனர்.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தகுழந்தையைக் காப்பாற்ற பயன்படுத்தும் கருவிகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி, எளிய முறையில் மீட்பது குறித்து செயல்விளக்கமும் அளித்தனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கருவிகள், ஆள் இல்லாத டோல்கேட், குடித்துவிட்டு வாகனத்தை இயக்கினால் சென்சார் மூலம் உணர்ந்து வாகனம் இயங்காமல் இருப்பது, எளிய முறையில் தண்ணீரை மறுசுழற்சி செய்வது, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் கருவி உள்ளிட்ட புதுமையான படைப்புகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றை உருவாக்கிய மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
WRITE A COMMENT