கொல்கத்தா
இந்தியாவில் 5-வது முறையாக நடக்கும் சர்வதேச அறிவியல் விழா-2019 (ஐஐஎஸ்சி) மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நவம்பர் 5-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் ஒரு பகுதியாக புதியதாக தொடங்கப்பட்ட 100 நிறுவனங்களின் பிரதிநிதிகள், அறிவியல் தொழில்நுட்பங்கள் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இதுகுறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அனில் கோத்தாரி கூறுகையில்,“இந்த அமர்வானது, புதிய தொழில்நுட்பம் குறித்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. டெலிமெடிசின், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அமைப்புகள், கல்வி மற்றும் சமூக நலன் ஆகியவை குறித்து புதிய நிறுவனங்களின் பிரநிதிகள் மாணவர்களுடன் உரையாடினர். கொல்கத்தாவில் உள்ள 250 பள்ளிகள் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரேயா நாக் என்ற 8-ம் வகுப்பு மாணவி “ஜொமாடோ போன்ற நிறுவனங்களில் பயணம் எழுச்சியூட்டும் வகையில் இருந்தது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பயணம், என் சிறிய சிந்தனையில் இருந்து பெரிய அளவில் சிந்திக்க தூண்டியது” என்றார். கர்வோ நியோகி என்ற 9-ம்வகுப்பு படிக்கும் மாணவி கூறுகையில், “உயிரி வாயுவில் இருந்து மின்சாரத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற அறிவியலை விழாவில் பார்வையிட்டேன். அதேபோல் எனது சமூகத்துக்கு பயளிக்கும் வகையில் ஏதாவது சொந்தமாக செய்ய விரும்புகிறேன்” என்றார்.
இந்த அறிவியல் விழா இன்று 8-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. அறிவியல் விழாவில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிwww.scienceindiafest.org என்ற இணையதளத்தில் அறியலாம்.
WRITE A COMMENT