விருதுநகர்
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ரோபாடிக் தகுதி போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுடன் ரோபோட் கலந்துரையாடியது பார்வையாளர்களை வியக்க வைத்தது.
தெற்காசிய தகுதி போட்டி
அவிஸ்கார் என்ற தனியார் அமைப்பு உலகளாவிய அளவில் ரோபோடிக் போட்டிகளைப் பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ளதேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெற்காசிய அளவிலான ரோபோடிக் போட்டிக்கான மாநில தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், கேரளா மற்றும் டெல்லியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என 250 பேர் 50 அணிகளாக பிரிந்து தாங்கள் பிரத்யேகமாக வடிவமைத்த ரோபோக்களுடன் போட்டியில் பங்கேற்றனர்.
மூன்று பிரிவுகள்அவிஸ்கார் நிறுவனத்தின் ரோபோடிக் தொழில்நுட்ப வல்லுநர்கள் நடுவர்களாக இருந்தனர். ஜூனியர் பிரிவு, நடுப்பிரிவு, சீனியர் பிரிவு என மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்பட்டது.
மனித வடிவிலான ரோபோட்
இதில் வெற்றி பெற்ற அணிகள் டெல்லியில் நடைபெறும் தெற்காசிய அளவிலான போட்டியிலும், அப்போட்டியில் வெற்றி பெறும் அணி ஜெர்மனியில் நடைபெறும் உலகளாவிய ரோபோடிக் போட்டியிலும் பங்கேற்கும். திருச்சியைச் சேர்ந்த புரோபெல்லர் டெக்னாலஜி என்றரோபோடிக் நிறுவனம் வடிவமைத்திருந்த ‘ஜேஃப்’ என்ற மனித வடிவிலான ரோபோட் போட்டியில் பங்கேற்க வந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடியது அனைவரையும் வியக்கச் செய்தது.
WRITE A COMMENT