சென்னை
சென்னை பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவ, மாணவிகளின் படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்காட்சி சென்னை ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஷ்ரம் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கோபாலபுரம் டிஏவி ஆண்கள் சீனியர் மேல்நிலைப்பள்ளி, கொடுங்கையூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி, ஆவடி மகாலட்சுமி வித்யா மந்திர், வேளச்சேரி டிஏவி பாபா சிபிஎஸ்இ பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 130 மாணவ-மாணவிகளின் புராஜெக்டுகள் இடம்பெற்றன.
இந்த கண்காட்சியை நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஷ்ரம் பள்ளியின் முதல்வர் வி.எஸ்.மகாலட்சுமி தொடங்கிவைத்து பார்வையிட்டார். நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை தலைவர் அழகு செந்தில்ராதா, உயிரி தொழில்நுட்பத்துறை தலைவர் சாந்தி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த படைப்புகளை தேர்வுசெய்தனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளுடன் அவர்கள் கலந்துரையாடினர். தண்ணீர் சேமிப்பு, நாளை போக்குவரத்து என மாணவ, மாணவிகளின் புதுமையான படைப்பு கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. நிறைவாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கே.நந்தினி நன்றி கூறினார்.
WRITE A COMMENT