சான்பிரான்சிஸ்கோ
பேஸ்புக் பயன்படுத்துவோர் மூலம் நல்ல லாபம் கிடைத்து வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிந்த கால் ஆண்டு அறிக்கையை பேஸ்புக் நிர்வாகம் நேற்றுவெளியிட்டது. அதன்படி, இந்தகாலாண்டில் பேஸ்புக்கின் நிகர லாபம் 6 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. நிறுவனத்தின் மொத்த லாபம் 28% உயர்ந்து 17.4 பில்லியன் டாலராக உள்ளது.
கடந்த ஆண்டு 245 கோடிமக்கள் பேஸ்புக் பயன்படுத்தி வந்தனர். தற்போது பயனாளர்களின் எண்ணிக்கை 8% உயர்ந்துள்ளது. பேஸ்புக் பயனாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைத்ததாகவும், அரசியல் விளம்பரம் மற்றும் கிரிப்டோகரன்சி மூலம் கவலை அளிக்கும்விதமாகவே லாபம் கிடைத்ததாக பேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
WRITE A COMMENT