பெய்ஜிங்
பெய்ஜிங் மெட்ரோ ரயிலில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகமுகத்தின் மூலம் பயணிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் கருவியை பயன்படுத்த உள்ளனர். மின்னணுபயண அட்டை முறையுடன் இத்தொழில்நுட்பமும் கடைபிடிக்கப்படும் என்று அறித்துள்ளனர்.
மெட்ரோ ரயிலில் போக்குவரத்து நெரிசல் வேளையில் பயணிகள்நீண்ட வரிசையிலும் பணியாட்களுடன் வாக்குவாதம் செய்யும் சூழலும் ஏற்படுகிறது. நகரம் முழுவதும் கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்யும்போது முகத்தை வைத்து எல்லா பகுதியிலும் கண்காணிக்கப்படும் என்று பெய்ஜிங் ரயில் நெரிசல் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், முகத்தின் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்படும் இந்த முறைசீனா முழுவதும் பயன்படுத்தபடுகிறது. சூப்பர் மார்க்கெட்டில் இருந்துவெளிவரும் நுகர்வோரை கண்காணிக்கிறது. இதனால் தனிநபர்உரிமை பாதிக்கப்படும் என்று சிலதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் நுகர்வோர்கள் இந்த தொழிநுட்பத்தை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.-ஏஎப்பி
WRITE A COMMENT