கொல்கத்தா
கொல்கத்தாவில் சர்வதேச இந்திய அறிவியல் விழாவை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நவம்பர் 5-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்தியாவில் 5-வது ஆண்டு சர்வதேச இந்திய அறிவியல் விழா -2019 (ஐஐஎஸ்சி), மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் வரும் நவம்பர் 5-ம் தேதி தொடங்குகிறது. பிஸ்வா பங்களா அரங்கில் நடக்கவிருக்கும் இந்த விழாவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்தியா நடந்தும் ஐஐஎஸ்சி விழாவில் விஞ்ஞானிகளுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்துமாணவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் கலந்துரையாட உள்ளனர். இதுகுறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது:இளம் மாணவர்களின் மனதில் அறிவியலை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த விழா அமையும். விஞ்ஞானம் மற்றும்அறிவியலை பரப்புதலே எங்கள் நோக்கம். 4 நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 12,000 பேர்பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 2,500மாணவர்களை, அறிவியியல் கிராம் என்றநிகழ்ச்சி மூலம் இணைக்கவுள்ளோம்.
இந்த ஆண்டு விழாவில், ‘ஆராய்ச்சி,புதுமை, மற்றும் அறிவியல் அதிகாரமளிக்கும் தேசம் (RISEN INDIA)’ மையக்கருத்தாக உள்ளது. இளம் விஞ்ஞானிகளுக்கான மாநாடு, அறிவியல் கண்காட்சி, அறிவியல் இலக்கிய விழா,பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மொத்தம் 28-க்கும்மேற்பட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர் கூறினார்.
WRITE A COMMENT