போட்டோஷாப் - (Menu) பட்டியல் அறிமுகம்


போட்டோஷாப் - (Menu) பட்டியல் அறிமுகம்

வெங்கி

போட்டோஷாப்பை உங்களது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள் அல்லவா? சரி, அதை இப்போது ஓப்பன் செய்யுங்கள். முதலில் தோன்றும் திரையின் மேல் பகுதியில் மட்டும் சில வார்த்தைகள் தோன்றும். அவைதான் நாம் இந்த போட்டோஷாப்பை கையாள உதவும் பட்டியல் / Menu ஆகும். அவை File, Edit, Image, Layer, Type, Select, Filter, 3D, View, Window மற்றும் Help போன்ற பகுதிகளைக் கொண்டிருக்கும். நாம் திடக் கோப்புகளைக் கையாள்வது போலதான் இதிலுள்ள மின்னணுக் கோப்புகளையும் கையாளப் போகிறோம். எனவே முதலில் File / கோப்பு பற்றிப் பார்ப்போம்.

File / கோப்புNew (Ctrl N / Keyboard Shortcut)இதில் முதலாவதாக New என்று உள்ளது. அப்படி என்றால் நாம் புதிதாக உருவாக்கக் கூடிய ஒரு கோப்பு அல்லது ஒரு பக்கம் என்று பொருள். அந்தப் பக்கத்தைக் கொண்டு புதிதாக நாம் ஒரு படத்தை உருவாக்கலாம். அல்லது வேறு ஒரு படத்தைப் பிரதி எடுத்துவந்து இந்தப் பக்கத்தில் உபயோகிக்கலாம். அதற்கு விசைப் பலகையில் (Keyboard) கண்ட்ரோல் N என்றுஅழுத்தினால் போதும். (Mac கம்ப்யூட்டரில் கமாண்ட் N) அல்லது மேக்கம்ப்யூட்டர் கீபோர்டை விண்டோஸ் கீபோர்டு போல மாற்றியும் அமைத்துக் கொள்ளலாம்.

இப்போது ஒரு பெட்டி தோன்றும். அதில் நாம் புதிதாக உருவாக்கப் போகும் பக்கம் ஒருபுகைப்படத்துக்காகவா அல்லது எழுத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை பிரிண்ட் செய்யவா அல்லதுவரைபடங்கள், ஓவியங்களை உருவாக்கவா அல்லது இணையதளத்துக்காகவா அல்லது மொபைல்போனுக்காகவா அல்லது வீடியோபோன்ற விஷூவல் மீடியாவுக்காவா என்று கேட்கப்படும். எனவே, நம்முடையத் தேவைக்கு ஏற்ப ஒரு புதிய கோப்பை உருவாக்கிக் கொள்ளலாம். மேலும் அதிலேயே அப்பக்கத்தின் நீள, அகல அளவு, நிறத்தன்மை போன்றவற்றையும் இறுதி செய்துகொள்ளலாம்.

Open (Ctrl O)இதை க்ளிக் செய்தால் ஏற்கெனவே நமது கோப்புகள் சேர்த்துவைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டும். அங்கிருந்து ஒரு பக்கத்தை நாம் மறுபடியும் திறந்து பார்க்க, எடிட் செய்ய இது உதவுகிறது.

Browse in Bridge... (Alt Ctrl O)இதில் பிரிட்ஜ் என்பது படங்களைக் கையாளும் வேறொரு மென்பொருள் ஆகும். அதை ஏற்கெனவேகணினியில் நிறுவியிருந்தால், விரும்பும் படங்களை அதில் சென்றுபார்ந்து, தேவையானவற்றை எடுத்துவந்து போட்டோஷாப்பில் எடிட் செய்ய இது உதவுகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x