ஸ்மார்ட் போன் தொலைந்துவிட்டதா?- எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?


ஸ்மார்ட் போன் தொலைந்துவிட்டதா?- எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?

நவீன உலகத்தில், ஸ்மார்ட் போன் தவிர்க்க இயலாத பொருளாகி விட்டது. ஸ்மார்ட் போனில்தான் நம்முடைய அனைத்துத் தகவல்களையும் சேமித்திருக்கிறோம். பர்சனல் புகைப்படங்கள், அடையாள அட்டைகளின் ஸ்கேன் காப்பிகள், வங்கி செயலிகள், வங்கிகள் தொடர்பான தகவல்கள் என அனைத்தும் போனில் அடங்கியிருக்கிறது.

ஒருவேளை உங்களின் ஸ்மார்ட் போனோ, டேப்லட்டோ தொலைந்துவிட்டால் என்ன செய்வது? மற்றவர்களின் கையில் பர்சனல் தகவல்கள் கிடைக்காமல் அழிக்க வழி உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஃபைன்ட் மை டிவைஸ்' எனும் வசதி மூலம் இதை மேற்கொள்ள முடியும், இதற்கு, தொலைந்து போன உங்களின் ஸ்மார்ட் போனில், இணைய இணைப்பு தேவை.

முதலில் https://www.google.com/android/find?u=0 என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யுங்கள். கூகுள் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்யுங்கள். இப்போது நீங்கள் பயன்படுத்திய போன் மற்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போன்கள் அல்லது டேப்லட்டுகளின் விவரங்களைக் காண முடியும்.

இதில், உங்களின் போன்/ டேப்லட் எங்குள்ளது என்பதன் விவரங்கள் திரையில் தோன்றும். நடப்பில் போன் இருக்கும் விவரம் தெரியாத பட்சத்தில் கடைசியாக போன் எங்கே இருந்தது என்னும் விவரம் தோன்றும்.

அதேபோல, திரையின் இடது ஓரத்தில் Play Sound, SECURE Device, Erase Device என்று, மூன்று தேர்வுகள் கொடுக்கப்படும்.

இதில் Play Sound ஆப்ஷனை க்ளிக் செய்தால், உங்களது போன் ஐந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து ஒலிக்கும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் போன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். போன் அருகிலேயே இருக்கும்பட்சத்தில் Stop Ringing கொடுத்து, நிறுத்தலாம்.

ஒருவேளை SECURE Device ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்களின் போன், லாக் செய்யப்பட்டு விடும். அதில் கடைசியாக நீங்கள் ஒரு செய்தியையோ, போன் நம்பரையோ கொடுக்கலாம்.

இறுதியாக Erase Device ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்கள் போனில் உள்ள அனைத்துத் தகவல்களும் அழிக்கப்படும். அதற்கு நீங்கள், மீண்டும் ஒருமுறை கூகுள் அக்கவுண்ட்டை லாகின் செய்ய வேண்டியது அவசியம்.

FOLLOW US

WRITE A COMMENT

x