ஐ.ஐ.டி. ஹைதராபாதின் மெய்நிகர் தொழில்நுட்பப் படம்


ஐ.ஐ.டி. ஹைதராபாதின் மெய்நிகர் தொழில்நுட்பப் படம்

ஹைதராபாத்

கோல்கொந்தா ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஹயத் பக்‌ஷி பேகம் என்ற மகாராணியின் வரலாற்றை அனிமேஷன், மெய்நிகர் (Virtual Reality) தொழில்நுட்பம் கொண்டு படமாக எடுத்திருக்கிறது ஐ.ஐ.டி ஹைதரா பாத்.

360 டிகிரி கோணத்தில் பார்க்கக்கூடிய இத்திரைப்படத்துக்கு ‘மா சஹேபா- தி குவீன் ஆஃப் ஹைதிராபாத்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

‘வடிவமைப்பு வாரம்’ என்ற நிகழ்ச்சி அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் ஐ.ஐ.டி. ஹைதிராபாத் நிறுவனத்தில் நடைபெற இருக்கிறது. அப்போது இப்படத்தின் திரையிடல் நடைபெறவிருக்கிறது.

‘‘நாட்டின் பழம்பெறும் சின்னங்களை காட்சி வடிவில் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் கன்னி முயற்சி இது ”என்று ஐ.ஐ.டி. ஹைதிராபாத்தின் வடிவமைத் துறை தலைவரான தீபர் ஜான் மேத்யூ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

WRITE A COMMENT

x