தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: கும்பகோணத்தில் நவ. 2-ல் நடக்கிறது


தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: கும்பகோணத்தில் நவ. 2-ல் நடக்கிறது

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்டக் கிளையின் சார்பில் தஞ்சாவூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டைசிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாவட்டத்தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் லெ.முருகன்வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், மாநில துணைத்தலைவர் பேராசிரியர் வெ.சுகுமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட முதன்மை மதிப்பீட்டாளர் பேராசிரியர் மாரியப்பன் மதிப்பீடு தொடர்பான செய்திகளைக் கூறினார். ஒருங்கிணைப்பாளர்கள் ராம் மனோகர், ராஜசேகர் ஆகியோர் இந்த ஆண்டுஇதுவரை மாவட்டத்தில் 250 ஆய்வுக்கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

மேலும், கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளியில் நவம்பர் 2 -ம் தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில், ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கும் அனைத்து மாணவர் களுக்கும், வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசால் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் நினைவுபரிசுகள், வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட மாநாட்டில் தேர்வு செய்யப்படும் ஆய்வுக் கட்டுரைகள், நவம்பர்16, 17 -ம் தேதிகளில் வேலூர் மாவட்டம் ஆற்காடு மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.கே. தியாகராஜன், கும்பகோணம் சிவகுமரன், சி.எஸ்.மெட்ரிகுலேஷன் பள்ளி கிளைத் தலைவர் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டப் பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

FOLLOW US

WRITE A COMMENT

x